Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்: கமல்ஹாசன் கோரிக்கை

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளா தார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப் புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித் துள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கூடுதலாக இரண்டு லட்சம் மாணவர்கள் சேரும் வாய்ப்புண்டு என கல்வி யாளர்கள் கருதுகிறார்கள் அதற்கேற்ப பதினொன் றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 15% வரை இடங்கள் அதிகரிக்கப்பட் டுள்ளது வரவேற்புக் குரியது.

கடந்த காலத்தில், பல்வேறு காரணங்களால் மக்கள் அரசுப் பள்ளி களைப் புறக்கணித்து வந்தார்கள். போதிய வருவாய் இல்லாதவர் களும் கூட கடன் வாங்கி யேனும் தங்கள் பிள்ளை களைத் தனியார் பள்ளி களில் சேர்த்து படிக்க வைத்தார்கள். ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்வில் பிள்ளைகளின் கல்வி என்பது பொருளியல் சிக்கலை உருவாக்கும் ஒன்றாகவே இருந்தது.

இன்று சூழல் பெருமளவில் மாறி மக்கள் அரசுப்பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகி றார்கள். இதற்கேற்ப பள்ளிகளின் உள்கட்ட மைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர் களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மாணவர்கள் ஆங்கிலத்தை தன்னம் பிக்கையோடு பேசவும் எழுதுவதற்கும் தேவை யான பயிற்சிகள், ஆன்லைன் வகுப்புகளைத் தங்குதடையின்றி நடத்து வதற்கான தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை அளிக்கப்பட வேண்டும்.

தரமான நூலகங்கள், ஆய்வகங்கள், காற்றோட்ட மான வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், சுத்தமான கழிப்பறை, ஆரோக்யமான மதிய உணவு, நவீன விளை யாட்டு உபகரணங்கள் என நம் அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளை விட பன்மடங்கு மேம்பட்டதாக மாற்றமுடியும்.

தமிழக அரசுக்கு இதைச் செய்யும் ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன். இதைச் சாத்தியமாக்க வேண்டும் என தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு  கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related posts

ebseries with ZEE5Tamil has commenced filming

Jai Chandran

பெண்களுக்கு மாதம் தோறும் ரூ 1500 வழங்கும் திட்டம்.. அதிமுக தேர்தல் அறிக்கை..

Jai Chandran

Isari Ganesh appointed as a Member of the Fertilizer Advisory Forum

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend