கம்ல்ஷாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 3வது நாளாக இன்று சென்னையில் நடந்தது. கூட்டதில் பங்கேற்க வந்த கமல் தொண்டர்கள் மலர் தூவி வரவேற்ரனர். பின்னர் கூடம் தொடங்கியது.
வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கமல் திட்டமிருப்பதாக தெரிகிறது.
சுற்றுப்பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல். சுற்றுப்பயணத்தின் போது மூன்று இடங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த முடிவு. முதற்கட்டமாக நெல்லை, திருச்சி, சென்னை என மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.