மக்கள் நீதி மய்யம் தலைவர் , உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படம் கமல்ஹாசன் 232. லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் கமல்ஹாசன் வெளி யிட்டார்.
ராஜ்கமல் இன்டர் நேஷனல் தயாரிக்கும் இப்படம் கோடை விடுமுறை யில் திரைக்கு வருகிறது. இப்படம் பற்றிய டைட்டில்உலக நாயகன் பத்மபூஷன் கமல்ஹாசனின் 66வது பிறந்த நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று மாலை 5 மணிக்கு கமல் நடித்த டீஸருடன் டைட்டில் வெளி யிடப்பட்டது. கமல் 232 படத் துக்கு ’விக்ரம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
கமல்ஹசன் நடிப்பில் இதற்காக பிரத்யேகமான டீஸரை லோகேஷ் உருவாக் கினார். தனி அறையில் நவீன துப்பாக்கிகளை ஜன்னலிலும் மற்ற இடங்களிலும் மறைத்து வைத்து விட்டு விருந்துக்கு அழைத்தவர்களுக்கு தலை வாழை இலையில் விருந்து பரிமாறு கிறார் கமல். திடீரென்று கத்திகளை வீசி ’விக்ரம்’ என பட டைட்டிலை அறிவிக்கிறார்.
விக்ரம் என்ற டைட்டில் ரசிகர்கலுக்கு ஏற்கனவே அறிமுகமானதுதான். 1986ம் ஆண்டு கமல் ஹாசன் சந்திர ஹாசன் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர்.
முன்னதாக கமல்ஹாசன் காலையில் தனது கட்சி அலுவலகத்துக்கு வந்தபோது ரசிகர்கள் பட்ட்டாசு வெடித்து வரவேற்றனர். கமலுக்கு அகில் இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிரஜா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.