பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க மத்திய அரசுக்கு கடிதம்..
கமல், தனுஷ் மற்றும் 33 பிரபலங்கள் எழுதினர்..
இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என கமல்ஹாசன், தனுஷ் மற்றும் 33 பிரபலங்கள்
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில் கூறியி ருப்பதாவது:
தமிழ் சினிமாவில் வேலையில்லா திண்டாட்டம், மோதல், தீண்டாமை, பெண் சிசுக் கொலை, பெண்களுக்கு அதிகாரம், மனித உறவு போன்ற பல சமூகப் பிரச்சினை களை தனது படங் களில் பேசி சமுதாய புரட்சிய ஏற்படுத்தி இருக்கிறார் பாரதிராஜா. நகரத்தில் மட்டுமே சுழன்றுக்கொண்டிருந்த சினிமாவை கிராமத்துக்கும் கொண்டு சென்றவர்.
பாரதிராஜா தனது படத்தில் சிவாஜி கணேசன், ராஜேஷ் கண்ணா, கமல்ஹாசன், சிரஞ்சீவி, ரஜினிகாந்த், நானா படேகர், சுஹாசினி மணிரத்னம், ராதிகா சரத்குமார், விஜய சாந்தி போன்றவர்கலுடன் பணியாற்றிஒரிகிறார். தற்போது பாரதி ராஜா படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தும் வருகிறார்.
பாரதிராஜா 43 ஆண்டு சேவை இன்னமும் தொடர்கிறது. அவரது சேவைக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்குவது இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்புக்கு சரியான நேரத்தில் தரும் சரியான அங்கீகாரமாக இருக்கும்.
இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு, நடிகர்கள் ஆர் பார்த் திபன், தனுஷ், இயக்குனர்கள் பாலா, வெற்றி மாறன், தனுஷ் பிரியதர்ஷன், ஸ்ரீகர் பிரசாத், பி லெனின் உள்ளிட்ட பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்த கடிதத்தில் கையெழுத் திட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தேசிய விருது வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.