Trending Cinemas Now
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

மே 22ல் ப்ரைம் வீடியோ புதிய ப்ரைம் ஒரிஜினல் படம் சிஸ்டம்..

ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.

அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம், செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார்.பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.

சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

“சிஸ்டம்” திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.

இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என இன்று அறிவித்துள்ளது. இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். திருப்பங்கள் நிறைந்த நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம், அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “சிஸ்டம்” திரைப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், இந்தி மொழியில் பிரத்யேகமாக ப்ரைம் வீடியொவில் வெளியாகிறது.

“சிஸ்டம்” திரைப்படம், அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த உலகில் நீதி மற்றும் உண்மைக்காக போராடும் இரு பெண்களின் கதையை பேசும் அதிரடி நீதிமன்றத் த்ரில்லர். சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள கதாபாத்திரமான நேஹா ராஜ்வன்ஷ் என்ற பொது வழக்கறிஞரும், ஜோதிகா நடித்துள்ள கதாபாத்திரமான எளிய பின்னணியைச் சேர்ந்த நீதிமன்ற ஸ்டெனோகிராபரான சரிகா ராவத் என்பவரும் எதிர்பாராத வகையில் ஒன்றிணைகிறார்கள். சமூக நிலைமையில் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்றாலும், உண்மையை வெளிக்கொணரவும் நீதியை நிலைநாட்டவும் அவர்கள் சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு எதிராக போராடுகிறார்கள்.

ப்ரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் பிரிவின் தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது…

“சிஸ்டம் என்பது பேராசை, நீதி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த மற்றும் பரபரப்பான திரைப்படம். அஷ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில், Baweja Studios ஆதரவுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஒவ்வொரு கட்டத்திலும் ஆச்சரியப்படுத்தும். சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜோதிகாவின் வலுவான நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். மே 22 அன்று ப்ரைம் வீடியோவில் வெளியாகும் இந்த திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ஆழமாக இணையும் என நம்புகிறோம்.”

Baweja Studios நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஹர்மன் பவேஜா கூறுகையில்..,
“சிஸ்டம்” என்பது முற்றிலும் மாறுபட்ட உலகங்களில் இருந்து வரும், தங்களுக்கென தனித்த எண்ணங்களை கொண்ட இரு உறுதியான பெண்களின் கதையாக உருவாகியுள்ள ஒரு விறுவிறுப்பான நீதிமன்ற டிராமா திரைப்படம். சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் வலுவான நடிப்பு இந்த கதையை உயிர்ப்பித்துள்ளன. அர்த்தமுள்ள மற்றும் சினிமாபூர்வமான கதைகளை சொல்லும் எங்கள் நோக்கத்தை இப்படம் பிரதிபலிக்கிறது. ப்ரைம் வீடியோ மற்றும் அஷ்வினி ஐயர் திவாரியுடன் இணைந்து பணியாற்றியது, இந்த கதையை மிகப்பெரிய அளவில் மற்றும் நம்பகத்தன்மையுடன் உருவாக்க உதவியுள்ளது. இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடமும் இந்த வித்தியாசமான கதையை கொண்டு சேர்க்க ஆவலாக உள்ளோம்,” என்றார்.

LINK :  https://www.instagram.com/p/DX_NcfpGvsA/

.

Related posts

ரஜினிகாந்துக்கு ரத்த நாள சிகிச்சை அளிக்கப்பட்டது

Jai Chandran

Golden Visa for Actress Komal Sharma!

Jai Chandran

Mallu Girl” from “Varalaru Mukkiyam” a sensational hit!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend