Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சுஷாந்த் சிங் ஆவியுடன் அமெரிக்க ஆவி நிபுணர் உரையாடல்.. தற்கொலைக்கு முன் நடந்தது என்ன?

சுஷாந்த் சிங் ஆவியுடன் அமெரிக்க ஆவி நிபுணர் உரையாடல்.

தற்கொலைக்கு முன் நடந்தது என்ன?

ஆவியுடன் பேசுகிறோம் என்று நம்மூரிலும் சிலர் காலம் தள்ளிக்கொண்டிருக்கி றார்கள். ஹாலிவுட் பேய் படங்களில் கையில் ஒரு கருவியை வைத்துக்கொண்டு அறை வீடு முழுவதும் தேடி பேய் இருப்பதை கண்டுபிடிப் பார்கள். ஆவி அல்லது ஆத்மாவை நம்புகிறவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அந்த வகையில் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டு இறந்த வுடன் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நான்கிற்கும் மேற்பட்ட ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்தனர்.
இந்நிலையில் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்று அவரது ஆவியிடம் பேசி உண்மை கண்டறிந்து சொல்லும்படி அமெரிக்காவில் ஆவிகளுடன் பேசும் நிபுணர் ஸ்டீவ் ஹஃப் என்பவரிடன் இணைய தளம் மூலம்கேட்டனர். அதை ஏற்று அவர் சுஷாந்த் ஆவியுடன் பேசியதாக இரண்டு வீடியோக்கள் வெளியிட்டுள்ளார்.
ஆவிகளுடன் தொடர்பு கொள்வதற்காக ஸ்பீக்கருடன் கூடிய பிரத்யேக கருவி பயன்படுத்தினர், தனி அறையில் அமர்ந்து ஆவி உடன் பேசும் வீடியோ வெளியிட் டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டீவ் கேட்கும் கேள்விகளுக்கு சுஷாந்த் ஆவி பதில் அளிக்க அது தெளிவில்லாமல் கேட்கிறது. அந்த ஆவி என்ன சொல்கிறது என்பதை ஆங்கிலத்தில் அவர் சப் டைட்டி லாக வெளியிட்டிருக்கிறார்.
வீடியோவில் இடம்பெற்றுள்ள உரையாடல் வருமாறு:
ஸ்டீவ்: “நீங்கள் வெளிச்சத்தில் இருக்கி றீர்களா?, நீங்கள் நேற்றிரவு பார்த்த வெளிச்சத்தில் இருக்கிறீர்கள்.
சுஷாந்த் ஆவி: நான் அதில் இருந்தேன்.
ஸ்டீவ்: நான் உங்கள் வேலை (நடிப்பு)
பற்றி தெரிந்திருக்கவில்லை, ஆனால் உங்கள் ரசிகர்களால் நீங்கள் அதிகம் நேசிக்கப்படுகிறீர்கள், உங்கள் ரசிகர் களிடம் எதையும் சொல்ல விரும்பு கிறீர்களா?”
ஆவி: (மவுனம்)
ஸ்டீவ்: நீங்கள் எப்படி இறந்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஸ்டீவ்: அவர்கள் அனைத்தையும் மருத்து வரிடம் விட்டுவிடுவார்கள், நாங்கள் இறந்து விட்டோம்.
(பின்னர் 2வது வீடியோவில் உரையாடல்)
ஸ்டீவ்:இறப்பதற்கு முன்பு என்ன சம்பவம் நடந்தது.
ஆவி: எனக்கும் ஒரு நபருக்கும் நீண்ட வாக்குவாதம் (மோதல்)நடந்தது.
ஸ்டீவ்:நீங்கள் தற்கொலை செய்தது ஏன்?
ஆவி: என்னை அந்த நிலைக்கு தள்ளினார்கள் (They Broght that Nail)
ஸ்டீவ்: அதற்கு மேல் சிந்தியுங்கள்..
ஆவி: அது அத்துடன் முடிந்துவிட்டது
ஸ்டீவ்: நீங்கள் எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா ?
ஆவி: நான் நல்லவன் (I am Good)
கடவுளைபார்க்க காத்திருக் கிறோம் (திடீரென்று குறுக் கிடும் மற்றொரு குரல்) இத்துடன் முடிந்தது.
இவ்வாறு அந்த உரையாடல் செல்கிறது.
ஸ்டீவ் கூறும்போது,’கடந்த 10 ஆண்டு களாக ஆவி ஆராய்ச்சி செய்கிறேன். அதற்காக சாதனத்தை உருவாக்கியுள் ளேன், நான் பேசியதிலேயே அன்பு நிறைந்ததாக சுஷாந்த் ஆவி இருந்தது. சுஷாந்த் ஆவியுடன் மற்றொரு ஆவியும் இருக்கிறது’ என்றார்.

Related posts

#SeetiMaar Radhe Out No

Jai Chandran

மருத்துவமனையிலிருந்து சசிகலா டிஸ்சார்ஜ்.. ஜெயலலிதா காரில் வீடு திரும்பினார்

Jai Chandran

நடிகர் விஜய் வீட்டில் முதல்வர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend