திரையுலகில் இதுவரை யாரும் செய்யாத சாதனை. இனியும் யாராலும் செய்ய முடியாத சாதனை நிகழ்த்திக்காட்டி தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் பொனெழுத்துக்களால் தனது பெயரை பதித்திருப்பவர் நடிகர் திலகம், செவாலியே சிவாஜி கணேசன். பராசக்தி படத்தில் தொடங்கி 288 படங்களில் நடித்திருக்கிறார் சிவாஜி. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஜூலை 21ம் தேதி 2001 ஆம் ஆண்டு தனது 75வது வயதில் மரணம் அடைந்தார். அவர் மறைந்து இன்றுடன் 19 ஆண்டுகள் ஆகிறது.
சிவாஜி 19வது ஆண்டு நினைவு தினத்தை தி. நகரில் இல்லத்தில் குடும்பத்தினர் அனுசரித்தனர். சிவாஜி உருவப்படம் மலர் களால் அலங்கரிக்கப்பட்டது. மூத்த மகன் ராம்குமார். இளைய மகன் பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் உருவப்படத் துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சிவாஜி நடித்த, ‘மன்னவரு சின்னவரு’ படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சிவாஜி நினைவு தினத்தில் அஞ்சலி தகவல் வெளியிட்டார். அதில் கூறும்போது, ’மனித நேயத்தில் திரை உலக வரலாற்றில் நடிகர் திலகம் படைத்தது சரித்திரம்- சாதனை-சகாப்தம். தங்கள் நினைவை போற்றுகிறோம் வணக்குகிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.