Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மோகன்லாலின் “எம்புரான்” டிரெய்லர் மார்ச் 20ல் ஐமேக்சில் வெளியீடு

மும்பையில் பிரம்மாண்ட விழாவில் ஐமேக்ஸ் பதிப்பில்  எம்புரான் பட டிரெய்லர்  நாளை வெளியாகிறது.

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் டிரெய்லர் நாளை, மார்ச் 20 ஆம் தேதி, மும்பையில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில், திரையுலக பிரபலங்கள் முன்னிலையில், ஐமேக்ஸ் பதிப்பில் வெளியிடப்படவுள்ளது.

“லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாமாக பிரம்மாண்ட பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ள “எம்புரான்” திரைப்படம், வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் உலகமெங்கும், ரசிகர்கள் பிரத்தியயேகமாக ரசிக்கும் வகையில், ஐமேக்ஸ் பதிப்பிலும், வெளியாகிறது. இதன் ஒரு பகுதியாக படத்தின் டிரெய்லர் நாளை ஐமேக்ஸ் பதிப்பில் வெளியாகவுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர், இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

2019-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், இந்த வருடத்தின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றாக, பான் இந்தியப் பிரம்மாண்ட படமாக “எம்புரான்” திரைப்படம் உருவாகியுள்ளது.

மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற ஸ்டீபன் நெடும்பள்ளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், டோவினோ தோமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்” மூலம் அறிமுகமாகிறார். அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவடார், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பிஜூ சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடேகர், நைலா உஷா, ஜிஜூ ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிக்குட்டன், அநீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபோனே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மலையாள சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கும் படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

இப்படம் உலகம் முழுக்க பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அதில் ஷிம்லா, லே, ஐக்கிய அரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கிய அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்கள் அடங்கும். அனாமார்பிக் வடிவத்தில் 1:2.8 ரேஷியோவில் எடுக்கப்பட்டுள்ள “எம்புரான்” திரைப்படம், மிகப் புதுமையான திரை அனுபவமாக இருக்கும். இந்த இரண்டாம் பாகத்தில் கதை உலகம் முழுக்க விரிகிறது.

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன், கலை இயக்குநர் மோகன்தாஸ், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, மற்றும் படத்தின் கலை இயக்குநர் நிர்மல் சஹதேவ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். முதல் பாகத்தின் இசையமைப்பாளரான தீபக் தேவ், இப்படத்தில் மிரட்டல் இசையைத் தந்துள்ளார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பான் இந்திய வெளியீடாக வெளியாகும் “எம்புரான்” திரைப்படத்தை, புகழ் பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

இப்படத்தினை தமிழில் கோகுலம் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கன்னடத்தில் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது, தெலுங்கில் ஶ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தியில் புகழ்பெற்ற நிறுவனமான ஏஏ பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தியத் திரையுலகில் முக்கியமான படமாக, எதிரப்பார்ப்பை எகிறவைத்துள்ள இப்படத்தினை, 2025 மார்ச் 27 அன்று, வெள்ளித்திரையில் ரசிக்கத் தயாராகுங்கள்!

Related posts

Vishal at Thirumala Thirupathi Devasathanam

Jai Chandran

Actor Jeevan And Actor Natty. Starrer “SIGNATURE”

Jai Chandran

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளி வாழ்க்கை படம் 800 உருவான கதை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend