Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட ஆப்ரகாமின் பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்!

பிரபல பத்திரிகையாளரும், பசும்பொன் தேவர் வரலாறு ஆவணபட இயக்குனருமான கோடங்கி ஆபிரகாம் குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி இருந்தார். இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினமான இன்று வெளியிடப்பட்டது.

 

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் “மலர்” டைட்டிலையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட புதுமுக நடிகர் சந்தோஷ் பிரபாகர், இயக்குனர் கோடங்கி ஆபிரகாம், பத்திரிகையாளர் ஒற்றன் துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

சமூகத்தால் தவறான பாதையில் தள்ளப்பட்ட ஒரு பெண் அதே சமூகத்தை போராடி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மலர் குறும்படத்தின் கதை. கயல்விழி என்ற புதுமுக நடிகை மலர் குறும்பட நாயகியாக அறிமுகம் ஆகிறார்.

இவர்களோடு “திடீர் தளபதி” சதீஷ்முத்து, ஜோயல்,ஹிதயத்துல்லா , ஒற்றன் துரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனீஷ் ஒளிப்பதிவில் விசு இசையில் இக்குறும்படத்தை ‘ருச்சி சினிமாஸ்’ & ‘பாஸ்ட் மெஸெஞ்சர்’ இணைந்து வழங்க, P.சுமித்ரா தயாரித்து இருக்கிறார்.

யுவராஜ் பத்திரிகை தொடர்பாளராக உள்ள இந்த குறும்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

Related posts

Upasana and Ram Charan’s Baby Shower

Jai Chandran

உணவு பிரச்சனையை எளிதாக்கும் கார்மெட் கார்டன்

Jai Chandran

காமெடி த்ரில்லரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend