சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பிரபு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
அருமை பெரியப்பா டாக்டர் கலைஞர் வழியில் நின்று கடுமையான சோதனைகளை கடந்தவர் அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்கள். அப்பாவின் அடிச்சுவற்றில் அயராது மக்கள் பணியாற்றி நல்லரசு நடத்திட வாழ்த்துகிறேன். முதன் முதலாக முதல்வர் பதவியில் அமர்கின்ற அன்பு சகோதரருக்கு நடிகர் திலகம் குடும்பத்தின் சார்பில் வரவேற்பும் வாழ்த்துகளும்.
அன்புச்சகோதரன் பிரபு.