Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஹரி ஹர வீரமல்லு (பட விமர்சனம்)

படம்: ஹரி ஹர வீரமல்லு

நடிப்பு: பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல், நாசர், சத்யராஜ், ஈஸ்வரிராவ், ரகுபாபு தணிகல பரணி, முரளி சர்மா, சுனில், ஆதித்யா மேனன், பூஜிதா பொன்னாடா, அனுசுயா வனஜா, கபீர் துஹான் சிங், நிஹார் கபூர்

தயாரிப்பு: ஏ எம் ரத்னம்

இசை: எம் எம் கீரவாணி

ஒளிப்பதிவு: ஞான சேகர், மனோஜ் பரமஹம்சா

இயக்கம்: ஜோதி கிருஷ்ணா

பிஆர்ஒ : ரேகா

ஹரி ஹர வீரமல்லு 17 ம் நூற்றாண்டில் நடந்த சரித்திர பின்னணி கதையாக உருவாகி உள்ளது.

மொகலாய மன்னன் அவுரங்க சீப் டெல்லியில். கொடுங்கோல். ஆட்சி  புரிகிறான்.  இந்துக்களை  முஸ்லீமாக மதம் மாற வற்புறுத்துகிறான். மாறாதவர்களை கொன்று குவிப்பது, கடவுள் சிலைகளை அழிப்பது, இந்துக்கள் மீது வரி விதிப்பது என்று துன்புறுத்துகிறான். அவுரங்கசீப்பின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடுகிறான் வீரமல்லு (பவன் கல்யாண்). அத்துடன் மதிப்புமிக்க கோகினூர் வைரத்தையும் மீட்கும் பொறுப்பை வீரமல்லு  ஏற்கிறான். இதன் முடிவு என்ன என்பதை கிளைமாக்ஸ் சொல்கிறது.

மொகலாயா  சாம்ராஜ்யத்தை ஆண்ட அவுரங்க சீப்  நடத்திய கொடுங்கோல் ஆட்சியை விவரிக்கும் படமாக உருவாக்கியிருக் கிறது.

ஹரி ஹர வீரமல்லுவாக பவன் கல்யாண்   நடித்திருக்கிறார்.

பவன் கல்யாண் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க வேண்டும்  என்பதால் ஹீரோயின் நிதி அகர்வாலுடன் காதல், சீண்டல் என்ற வேறு எதிலும் கவனத்தை திருப்பாமல்  முழு நேர  ஆக்ஷன்   ஹீரோவாக மாறியிருக்கிறார்.

வாள் வீச்சு மல்யுத்தம் என சண்டைக் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார் பவன். இது அவரது இமேஜை உயர்த்த உதவும். ஒட்டு மொத்தமாக இஸ்லாமியர்களை தாக்காமல் வடநாட்டில் அவர்கள் தாகம், பசி தீர்ப்பது, இஸ்லாமிய குழந்தையை அன்புடன் அணைத்து தூக்கி அன்பு காட்டுவது என்று சில  நாசுக்கான வாக்கு அரசியல் காட்சிகளை புகுத்தியிருப்பது புத்திசாலித்தனம்.

பவன் – பாபி தியோல்  கிளைமாக்ஸ்  சண்டை காட்சி இல்லாதது ஏமாற்றம். 2ம் பாகத்தில் இது நடக்கும் என்று டைட்டிலோடு படம் முடிகிறது.

அவுரங்க சீப் பாத்திரத்துக்கு பொருத்தமான தேர்வாக பாபி தியோல் உள்ளார். அவரது ஆக்ரோஷமான வில்லத்தனம் அதிர்ச்சி தருகிறது.

சத்யராஜ் இந்து மத குருவாக குடுமி வைத்துக் கொண்டு நடித்திருப்பது அவரது அரசியல் பாலிசிக்கு சம்பந்தமில்லாததாக உள்ளது.

ஹீரோயின் நிதி அகர்வால் கொள்ளை அழகுடன் பளபளக்கிறார்.

படத்தில் சில அரங்குகள் பாராட்டும் விதத்தில்  அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால்  சில கிரீன் மேட் காட்சிகள் சொதப்பி விடுகிறது. காட்சியே ஷேக் ஆவது போன்ற பிழைகளை திருத்தியிருக்கலாம்.

பல வெற்றி படங்களை தயாரித்தளித்த ஏ எம் ரத்னம் இப்படத்தை அதிக பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.

பவன் கல்யாண் என்ற பெரிய  ஹீரோவை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்தி பவனையும் அவரது ரசிகர்களையும் முழுதிருப்தியாக்கி இருக்கிறார் இயக்குனர் ஜோதி கிருஷ்ணா. இனி இவரை நம்பி பெரிய ஹீரோகள் தாராளமாக கால்ஷீட் தருவார்கள் என நம்பலாம்

எம்.எம்.கீரவாணி (மரகத மணி) சரித்திர படத்துக்கே உரித்தான பிரமாண்ட இசை அமைத்திருக்கிறார்.

ஹரி ஹர வீரமல்லு – மத அரசியலுடன் ஒரு சரித்திர படம்.

By :

ஜெயச்சந்திரன் கே

www.trendingcinemasnow.com

 

 

 

 

 

 

 

 

Related posts

டூடி (பட விமர்சனம்)

Jai Chandran

Malica Ravikumar launches Life Coaching Company for women

Jai Chandran

சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் புதிய படம் “அழகிய கண்ணே” !!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend