படம்: கணேசபுரம்
நடிப்பு: சின்னா, ரிஷா, ஹரிதாஸ், கயல் பெராரா, பசுபதி ராஜ், சரவணசக்தி, ஹலோ கந்தசாமி, டிக்டாக் ராஜ்பிரியன்,
தயாரிப்பு: க.காசிமாயன்
இசை: ராஜா சாய்
ஒளிப்பதிவு: பி.வாசு
இயக்குனர்: வீரங்கன். கே.
மதுரை பக்கத்தில் ஒரு கிராமம். அங்கு வாழ்பவர் களுக்கு திருட்டுதான் தொழில். அவர்கள் சிக்கிக்கொண்டால் காப்பாற்ற ஒரு ஜமீன் இருக்கி றார். சின்னா நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்கி றார். ஒரு கட்டத்தில் சின்னா வுக்கு பெண்ணுடன் காதல் மலர்கிறது. இதனால் திருட்டை மறக்கிறார். இதற் கிடையில் பஞ்சாயத்தில் ஊர் தலைவரை சின்னா அடித்து விடுகிறார். அதைக்கண்டு கோபம் அடையும் அவரது மகன், சின்னாவை தீர்த்துகட்ட எண்ணுகிறார். இதன் முடிவு என்ன என்பதை கிளைமாக்ஸ் சொல்கிறது.
அம்மாசி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஹீரோ சின்னா. பாத்திரத்துக்கு ஏற்ற தோற்றம், தோற்றத்துக்கு ஏற்ற நடிப்பு என்று களைகட்டு கிறார் சின்னா. நண்பர்களுடன் சேர்ந்து திருடும் சின்னாவுக்கு ஹீரோயின் ரிஷாவுடன் காதல் ஏற்பட்டதும் திருட்டை மறக் கிறார். இதனால் நண்பர்கள் பிரிகின்றனர்.
சின்னா காலரை தூக்கிவிட்டு லூங்கியை ஏற்றிக்கட்டிக் கொண்டு பீடியும் கையுமாக பாத்திரத்தோடு ஒன்றி இருக்கிறார். புதுமுகமாக இருந்தாலும் சின்னா நடிப்பை செமையாக பின்னியிருக் கிறார். அவரது நண்பர்களாக டிக்டாக் ராஜ் பிரியன், காசி மாயன் நடித்திருக்கின்றனர்.
ஹீரோ சின்னாவின் அத்தை பெண் சின்னாவின் நண்பரை காதலிப்பது புதுசு.
படத்த பார்த்தா சுப்ரமணிய புரம் மாதிரி இருக்குன்னு சொல்லணும்னு நினைத்து எடுத்திருப்பார்கள் போலிருக் கிறது, அந்த படத்தைத்தான் இப்படம் ஞாபகப்படுத்து கிறது.
படத்தின் கதையை ஹீரோ சின்னவே எழுதி உள்ளார். நட்பு, காதல், களவு மூன்றையும் கலந்து ரசிக்கும் படி இயக்கி உள்ளார் வீராங்கன். கே. படத்துக்கு ஒளிப்பதிவும் இசையும் கைகொடுக்கிறது.
கணேசபுரம்- ரசிக்கலாம்.