Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மாயோன் (பட விமர்சனம்)

படம்: மாயோன்

நடிப்பு:  சிபி சத்யராஜ், தான்யா,  டத்தோ ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், பகவதி பெருமாள், ஹரிஷ் ஃபெராடி

தயாரிப்பு: டபுள் மீனிங் புரடக்‌ஷன் அருண் மொழி மாணிக்கம்

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு: ராம் பிரசாத்

இயக்கம்: கிஷோர் என்.

பி ஆர் ஒ: யுவராஜ்:

காந்தாரியிடம் சாபம் வாங்கிய கிருஷ்ணர் அந்த  கவலையில் புல்லாங் குழலில் சோககீதம் இசைத்தபடி காட்டுக்குள  இருக்கிறார். அதைக்கண்ட கந்தர்வர்கள் அவரை .மகிழ்விக்க இசைக் கருவிகள் இசைக்கின்றனர். கிருஷ்ணர் சோகத்தை மறந்து ஆனந்தம் அடைகி றார். அவர் தனது புல்லாங்குழலை தவறவிடுகிறார். அந்த இடத்தில் மன்னர் ஒருவர் பெரிய ஆலயம் அமைக்கிறார். பழமை வாய்ந்த ஆலயத்தை தொல்லியல் துறை ஆய்வு செய்ய முடிவு செய்கிறது. கண்டிப்பான அதிகாரி கே எஸ் ரவிகுமார் தலைமையிலான குழு களம் இறங்கு கிறது.  அக்குழுவில் உள்ள ஹரிஸ் பெராடி, சிபி, தான்யா உள்ளிட்டவர்கள் கூட்டு சேர்ந்து கோவில் ரகசிய அறையில் உள்ள விலை மதிப்பற்ற தங்க ஆபரணங் களை கொள்ளையடிக்க திட்டமிடுகின் றனர்.  அதன்படி ரகசிய அறையை கண்டுபிடிக்கிறார்களா?  கோவிலில் உள்ள அமானுஷ்ய சக்தி அவர்களை என்ன செய்கிறது என்பது போன்ற பல கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

நம்புகிறவர்களுக்கு சாமி நம்பாதவர்க ளுக்கு  வெறும் கல் என்பதுபோல் இபபடக் கதையும் நம்புகிறவர்களுக்கு  நிஜம் நம்பாதவர்களுக்கு வெறும் கட்டுக்கதை .

படம் தொடங்கியது முதல் இறுதி வரை பிரமாண்ட   காட்சிகளும் , இசைஞானி இளையராஜா  இசையும் ரசிகர்களை பிரமிப்பிலேயே வைத்திருக்கிறது.

அகழாய்வு ஆராய்ச்சியாளராக வருகிறார் சிபி . கட்டத்தை பார்க்காமாலேயே  சதுரங்க ஆட்டம் ஆடி வெற்றி பெறும் திறமைசாலியான இவர்  புராதன கிருஷ்ணர் கோயிலில் ரகசிய அறை இருப்பதை கண்டுபிடித்து அதில் உள்ள பொன்னையும், பொருளையும் கொள்ள யடிக்க போடும் திட்டம் நிறைவேற்ற அவர் செய்யும் செயல்கள் அடுத்து என்ன நிகழுமோ என்ற அச்சத்தை படர விடுகிறது.

சிபி, தான்யா டீம் இரவில் கோயிலுக்குள் நுழைந்து ரகசிய அறையின் சாவியை கண்டுபிடிக்க போராடுவது த்ரில்.

தான்யாவும் மற்றவர்களும் கோயிலில் அமானுஷ்ய சக்திகளான ஐந்து தலை பாம்பு, காவல் தெய்வம், குள்ள மனிதன் போன்றவர்களிடம் சிக்கி சிதறி ஓடுவது பரபரப்பு.

கோயில் பரம்பரை பாதுகாவலராக நடித்திருக்கும் ராதாரவி இறுக்கமான நடிப்பால் கதையின் பிடிமானத்தை வலுவாக்குகிறார். அதேபோல் உயர் அதிகாரி கே எஸ்.ரவிகுமார் கோயிலில் நடக்கும் அத்தனை விஷயங்களையும்  கண்காணித்து கொள்ளையை முறியடிப்பது அதற்காக அவர் ஏற்பாடு செய்திருந்த நபரும் யார் என்பது வெளிப்படும்போது ஆச்சரியம் இரட்டிப்பா கிறது.

முதலில் குறிப்பிட்டதுபோல் படத்துக்கு தூணாக நிற்பது இளையராஜாவின் இசையும், ராம் பிரசாத்தின் ஒளிப்பதிவும் தான். ராஜா செவிக்கு இசை விருந்தும் பிரசாத் கண்ணுக்கு வண்ண விருந்தும் படைத்திருக்கிறார்கள்.

தயாரிப்பில் தாராளம் காட்டியிருக்கிறார் அருண் மொழி மாணிக்கம்.

பிரமாண்ட கிருஷ்ணர் சிலையும்,  கருட வாகன சிலையும் வடிமைத்த ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம் சிலைகளுக் குள் தெய்வீக தன்மையை தவழவிட்டிருக் கிறது.

மாயோன் – ஆன்மீகமும் அறிவியலும் கலந்த கலவை.

 

 

 

 

 

 

Related posts

Annaatthe4thSingle VaaSaamy is Here.

Jai Chandran

Urvashi and Joju George Lead “Aasha”

Jai Chandran

From the bottom of Ashok Selvan’s heart

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend