படம்: சிக்லெட்
நடிப்பு: சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா , சுரேகா வாணி,அம்ரிதா ஹால்டர். ஶ்ரீமன்,மனோபாலா, ஜாக் ராபின்கீ , மஞ்சீரா, ராஜகோபால்
தயாரிப்பு: எஸ் எஸ் பிலிம்ஸ் சீனிவாச குரு
இசை: பால முரளி பாலு
ஒளிப்பதிவு: கொளஞ்சி குமார்
இயக்கம்: முத்து
பி ஆர் ஒ :யுவராஜ்
நயன் கரிஷ்மா, சுரேகா வாணி உள்ளிட்ட மூன்று தோழிகள் பள்ளிப்படிப்பை முடித்து அடுத்த கட்டத்துக்கு செல்ல தயாராகின் றனர். இந்நிலையில் அவர்கள் பருவ கோளாறு காரணமாக பாய் பிரண்டுகளை தேடுகின்றனர். வீட்டுக்கு தெரியாமல் அவர்களுடன் பழகும் தோழிகள் மூவரும் ஒரு கட்டத்தில் பாய் ஃப்ரெண்ட்ஸ்களுடன் பார்ட்டி சென்று என்ஜாய் செய்வதற்காக முடிவு செய்கின்றனர. வீட்டில் தோழியின் தங்கை திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு எஸ்ஸாகின்றனர். ஒவ்வொருவரும் பாய் பிரண்ட்டுகளுடன் காரில் புறப்பட்டு செல்கின்றனர். ஒரு வழியாக இதை மோப்பம் பிடித்த பெற்றோர்கள் பதறுகின்றனர் எப்படியாவது தங்கள் மகள்களை கற்புடன் காப்பாற்ற வேண்டும் என்று அவர்களை பின்தொடர்ந்து செல்கின்றனர். ஆனால் அவர்கள் பெற்றோரிடம் சிக்காமல் தப்பி வேறு இடத்திற்கு செல்கிறார்கள். அந்த இடத்திற்கும் பெற்றோர்கள் தேடி செல்கின்றனர். இதற்கி டையில் பாய் . ரூம் போட்டு தங்கும் தோழிகளின் கதி என்ன ? அவர்களை பெற்றோர்களால் காப்பாற்ற முடிந்ததா? என்பதற்கு சிக்லெட் படம் இளமை ததும்ப பதில் அளிக்கிறது.
சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி முற்றிலும் புது முகங்களாக நடித்திருக்கின்றனர் இவர்களுடன் ஸ்ரீமன், மனோ பாலா, ராஜகோபால் போன்றவர் களும் நடித்திருக்கிறார்கள்.
புதுமுக நடிகைகளாக நடித்திருப்ப வர்கள் தாராளம் தாராளம் ஏகத்துக்கு தாராளம் என்று ஆடை குறைப்பு செய்து இளவட்டங்களை தங்கள் அக்குளில் தூக்கி வைத்துக் கொள்கின்றனர்.
தொடக்க காட்சிகளில் தோழிகள் மூவரும் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது.
பாய் பிரண்டுகளுக்கு இளவட்ட நாயகிகள் தங்கள் கவர்ச்சியை காட்டி அவர்களை தங்கள் பின்னால் அலைய விடுவதும், ஒரு கட்டத்தில் வீட்டுக்கு தெரியாமல் பாய் பிரண்டுகளுடன் சென்று பார்ட்டியில் மஜா செய்ய பார்ப்பதும் இளவட்டங்களை இருக்கையில் இருந்து எம்பி குதிக்க வைக்கிறது.
ஶ்ரீ மன் தனது மகள் மீது வைத்தி ருக்கும் நம்பிக்கையில் அவர் என்ன சொன்னாலும், என்ன கேட்டாலும் அதற்கு ஓகே சொல்வதும் அதை தனக்கு சாதகமாக மகள் பயன்படுத்திக் கொண்டு பாய்பிரண்டுடன் மகள் ஓடுவதும் அதேபோல் மற்ற இரண்டு தோழிகளும் பாய் பிரண்டுடன் கிக் உடையில் சென்று அவர்களுடன் ஒட்டி உரசி உசுப்பேற்றும்போது அரங்கில் இருக்கும் இளவட்டங்களின் தலை சுழன்று ஏக்கப் பெருமூச்சு வெப்ப மாக அரங்கை அனல் பறக்க செய்கிறது.
பாய் பிரண்டுகளுடன் செல்லும் தோழிகள் காரில் இருந்து இறங்கி மருந்து கடை சென்று மனோபாலா விடம் பலான விஷயத்தை கேட்டு வாங்கி 500 ரூபாய் கொடுத்து. விட்டு எஸ்ஸாவது ஏ வகையறா காமெடி.
படத்தில் 80 சதவீதம் கவர்ச்சியை இயக்குனர் கட்டவிழ்த்து விட்டிருந் தாலும் கடைசி 20% பெற்றோர் களின் ஆதங்கத்தையும் அவர்கள் படும்பாட்டையும் சொல்லி கிளை மாக்சை அட்வைஸ் கார்ணராக்கி இருக்கிறார்கள்.
படம் கவர்ச்சிக்காக எடுக்கப்பட்டதா அல்லது இளவட்டங்களை கவர எடுக்கப்பட்டதா , என்பதை தாண்டி பெற்றோர்கள் மகள்கள் விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த எடுக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்குள் செல்லாமல் ஒரு பொழுதுபோக்கு படம் என்ற ரீதியில் எடுத்துக்கொண்டால் குறைகள் தெரியாது, ஆனால் மகன்களின் விஷயத்தில் பெற்றோர்கள் எவ்வளவு கவன மாக இருக்க வேண்டும் என்பதை கதையின் விடையாக இயக்குனர் முத்து அளித்திருப்பது ஆறுதல்.
எஸ் எஸ் ஃபிலிம் சார்பில் ஸ்ரீனிவாசன் குரு ஏ தயாரித் திருக்கிறார்.
ஐஸ் சொட்ட சொட்ட கொலஞ்சி குமார் படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலமுரளி பாலு நிலவட்டங்களை தொழிலில் ஆட்டம் போடும் வகையில் இசையமைத்திருக்கிறார்.
சிக்லெட் – இளவட்ட பட்டாசு.