படம்: தலைவி
நடிப்பு: கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, நாசர், தம்பி ராமையா, மதுபாலா, ஜெயஸ்ரீ, சமுத்திரக்கனி, நாசர்
தயாரிப்பு:வைப்ரி மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட், ஜீ ஸ்டுடியோஸ்
இசை: ஜி.வி.பிரகஷ்குமார்
ஒளிப்பதிவு: விஷால் விட்டல்
இயக்கம் : விஜய்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை 3 ம்ணி நேரத்தில் சொல்வது என்பது இயலாத காரியம். ஆனால்அவரது வாழ்க்கையின் தொகுப்பை தலைவி படத்தில் ஓரளவுக்கு சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஜய். 1965ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரையிலான சம்பவங்களின் தொகுப்பும், அந்த நேர்த்தில் அவரது வாழ்கையில் குறுக்கிட்டு மாற்றங்கள் ஏற்படுத்தியவர்களை பற்றியும் கதை சித்தரிக்கிறது.
15 வயதில் எம் ஜெ ஆர் உடன் ஜெயா ஜோடியாக நடிக்கிறார். அவரை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்கிறார் எம் ஜெ ஆர். அவரது நல்ல குணங்களை கண்டு ஜெயாவுக்கு காதல் பிறக்கிறது. அதை ஏற்க மறுக்கும் எம் ஜெ ஆர் அவருக்கு அறிவுரைகள் வழங்குகிறார். ஆனாலும் ஜெயாவின் காதல் குறையாத நிலையில் அவரது அன்புக்கு எம் ஜெ ஆரும் சம்மதம் என்பதுபோல் அன்பு பரிமறுகிறார். சினிமாவில் இந்த ஜோடி உச்சத்தை தொடுகிறது. ஒரு கட்டத்தில் காலச் சூழல் எம் ஜெ ஆர் சினிமாவிலிருந்து கவனத்தை திருப்பி அரசியலில் தனிக் கட்சி தொடங்கி அதில் கவனம் செலுத்துகிறார். இதனால் ஜெயா, எம் ஜெ ஆர் உறவில் இடவெளி ஏற்படுகிறது. பின்னர் அரசியல் கூட்டத்தில் நாட்டியம் ஆட வரும் ஜெயாவை அரசியல் கட்சியில் சேர அழைப்பு விடுக்கும் எம் ஜெ ஆர் அவரை கட்சி பணியில் ஈடுபடுத்துகிறார். அவரது வளர்ச்சி கட்சி மூத்த தலைவஎர் ஆர் என் விக்கும் இன்னும் சிலருக்கும் பிடிக்காததால் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கட்சியிலிருந்து ஜெயா வெளியேற்றப்படுகிறார். தனக்கு அரசியல் ரீதியாக வந்த எதிர்ப்புகளை வெற்றி கண்டு எப்படி அவர் அரசியல் தலைவி ஆகிறார் என்பதே கதை.
ஜெயா வேடத்தை தனது அனுபவ நடிப்பால் உறுதி பட செய்திருக்கிறார் கங்கனா ரனாவத். இளம் வயதில் ஜெயா சினிமாவில் நடித்த காட்சிகளை தத்ரூபமாக நடன அசைவுகள் மூலம் நடித்துகாட்டி கவர்கிறார் கங்கனா ரனாவத் அதேபோல் எம் ஜெ ஆர் ஆக வேடமேற்றிருக்கும் அரவிந்த் சாமியும் எம் ஜி அரின் நடன அசைவுகள், அவர் படங்களில் காட்டும் ஸ்டைல்களை செய்ய அரும்பாடுபட்டிருக்கிறார். என்னதான் எம் ஜி ஆர், ஜெயலலிதா வேடத்தில் நடித்ட்தாலும் முற்றிலுமாக அவர்கள் அந்த இரு பெரும் இமயங்களை முழுவதுமாக கண்முன் நிறுத்த இயலவில்லை என்பதையும் சில காட்சிகளில் தெரியவே செய்கிறது.
நடிகையாக ஜெயா வேடத்தில் வெகுளித்தனமாக இருக்கும் கங்கனா அரசியல் களத்துக்குள் அடியெடுத்து வைத்தபிறகு அவர் கதாபாத்திரத்துக்கு நடிப்புபிலும் தோற்றத்திலும் மாறுதல் காட்டுவது வேடத்தை தூக்கி நிறுத்துகிறது. குறிப்பாக அவர் பாராளுமன்றத்தில் பேசும் காட்சி, எம் பி ஒருவருக்கு ஆங்கிலத்தில் பதிலடி தருவது, சமுத்திரக்கனிக்கு சவால் விடுவதெல்லாமே புயலை கிளப்புகிறது.
ஜெயாவின் தாயாக பாக்யஸ்ரீ, எம் ஜி ஆர் மனைவி ஜானகியாக மதுபாலா, சசியாக பூர்ணா, ஜெயாவின் உதவியாளராக தம்பி ராமையா ஆர் என் வியாக சமுத்திரக்கனி என எல்லோருமே வேடத்தை பூர்த்தி செய்திருக்கின்றனர்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையில் இன்னும் சொல்ல வேண்டிய விஷ்யங்கள் எவ்வளவோ இருக்கிறது, தன்னால் முடிந்தவரை யாருக்கும் மனகஷ்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தலைவி கதையை கையாண்டுள்ள இயக்குனர் விஜய் எந்த சிக்கல், பிரச்னை இல்லாமல் படத்தை திரைக்கு கொண்டு வந்திருப்பதே சாதனைதான்.
வைப்ரி மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட், ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கிறது. காட்சிகளை மிகை இல்லாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விஷால் விட்டல்.
படத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை. 3 கால கட்ட இசைகளை பல்வேறு அரிய கருவிகளை பயன்படுத்தி காட்சிகளுக்கும் பாடல்களுக்கும் உயிரோட்டம் கொடுத்திருக்கிறார். அதேபோல் அந்த காலத்து அரங்குகளை காட்சிகளுக்கு வடிவமைத்து பாராட்டை பெற்றிருக்கிறார் அரங்க அமைப்பாளர் ராமகிருஷ்ணா, மோனிகா நிகோட்ரி. மதன் கார்க்கி வசனங்களும் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.
தலைவி- தலைமை தாங்க தகுதியாவனவர்.