படம்: ஏலே
நடிப்பு: சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமதி, சனா உதயகுமார், கைலாஷ், அகல்யா, தமிழரசன், சுதர்சன் காந்தி, கணேஷ், சரண்யா ரவிச்சந்திரன் ஆனந்த்
தயாரிப்பு: எஸ்.சசிகாந்த்
கிரியேட்டிவ் தயாரிப்பு: புஷ்கர் காயத்ரி
இசை: கேபர் வாசுகி, அருள்தேவ்
ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்
எழுத்து-இயக்கம்: ஹலிதா சமீம்
சைக்கிளில் ஐஸ்பெட்டியை வைத்துக்கொண்டு ஊரில் ஐஸ் விற்கும் முத்துக்குட்டி (சமுத்திரக்கனி) குடிபழக்கமும் கொண்டிருப்பதால் குழந்தைகள் மீது அதிக அக்கறை காட்டாமல் வாழ்கிறார். திடீரென்று முத்துக்குட்டி இறந்துவிட்டார் என்று தகவல் பரவ ஊரே திரண்டு வருகிறது. சென்னையிலிருக்கும் பார்த்தி (மணிகண்டன்) தந்தைக்கு கொள்ளி வைக்க வருகிறார். மாலையில் பிணத்தை எடுக்க முடிவு செய்தபோது பிணம் காணாமல் போகிறது. அதிர்ச்சி அடைந்த பார்த்தி பிணத்தை மறுநாள்தான் எடுக்க உள்ளதாக கூறிவிட்டு நண்பர்களுடன் இரவோடு இரவாக பிணத்தை தேடி அலைகிறார். இதற்கிடையில் பண்ணையார் வீட்டு பெண்ணை காதலித்த பார்த்தி அந்த காதல் கைகூடவில்லை என்று எண்ணி விரக்தி அடை கிறான் ஒருபக்கம் பண்ணை யார் மகளுக்கு திருமண ஏற்பாடு மறுபுறம் தந்தையின் பிணத்தை தேடி அலையும் நிலை. இந்த களேபரத்தில் அடுத்தடுத்து நடக்கும் திருப் பங்கள் எப்படி கிளைமாக்ஸை முடிக்கப் போகிறார்கள் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது.
படத்துக்கு சமுத்திரக்கனி, மணிகண்டன் ஆகியோருடன் இயக்குனர் ஹலிதா ஷமீம் ஒரு அச்சாணியாக இருக்கிறார். எல்லா பாத்திரங்களையும் ஆட்டிவைத்திருக்கிறார் இயக் குனர்.
தொடக்க காட்சியே சமுத்திரக் கனியின் பிணக்கோலம் காட்டப்படுகிறது. அந்த இடத்தில் ஒப்பாரி வைக்கவும் ஆறுதல் சொல்லவும் வரும் பெருசுகளும் பொடிசுகளும் செய்யும் சேட்டைகள் பிணவீடு என்பதையே மறக்கடிக்கச் செய்துவிடுகிறது.
தந்தை சமுத்திரக்கனி உடல் அருகே கையை கட்டிக் கொண்டு நிற்கும் மணி கண்டன் தனக்கு தன் அப்பன் செய்த தகிடுதத்தங்களை அசைபோட்டு அவ்வப்போது பிளாஷ் பேக்கிற்கு கூட்டிச் செல்கிறார்.
சைக்கிளில் ஐஸ் பெட்டியை வைத்துக்கொண்டு ஊர் முழுக்க ஐஸ் விற்று திரியும் சமுத்திரக்கனியின் சேட்டை கள் ஒரே அதிரிபுதிரி. சின்ன பிள்ளைகள் செய்யும் சேட்டை களை எல்லாம் ஒன்றுவிடா மல் செய்து ரவசு கட்டுகிறார்.
அடுத்த வீட்டு கோழியை ஆட்டையபோட்டு குழம்பு வைப்பது, கோழி குஞ்சுவை நடுரோட்டில் மேயவிட்டு யாராவது அதன் மீது வண்டி ஏற்றிவிட்டால் அவர்களிடம் பணம் பறிப்பது, பையனின் உண்டியலை உடைப்பது, பஸ்சில் இடம் பிடிக்க சீட் மீது செருப்பு வைப்பது, செருப்பை எடுத்து வீசிய டீச்சரை கண்டபடி திட்டுவது என மனுஷன் ரகளை அடங்கிய பாடில்லை.
சமுத்திரக்கனியை இப்படி சாகடித்துவிட்டார்களே என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது அவர் உயிரோடு இருப்ப தாக காட்டி ஷாக் கொடுக்கும் இயக்குனர் திடீரென்று இன்னொரு சமுத்திரக்கனியை காட்டி ஷாக் மேல் ஷாக் தருகிறார்.
மகனாக நடித்திருக்கும் மணி கண்டன் அளந்து அளந்து நடித்திருக்கிறார். பிணமாக இருக்கும் அப்பாவை திட்டு வதாகட்டும், அவரது ஐஸ் பெட்டியை களவாடிய இளவட்டங்களை நய்ய புடைப்பதாகட்டும் எதார்த்தத்தை விட்டுக்கொடுக் காமல் வாழ்கிறார்.
சுழன்றடிக்கும் சூறாவளியில் அவ்வப்போது மணிகண்டன், மதுமதி காதல் தென்றலாய் தழுவுகிறது. ஒரு சில நிமிடங் களே மேடையில் ஆடும் மதுமதி பம்பரமாக சுழன்று அசத்துக்கிறார். மற்ற எல்லா கதாப்பாத்திரங்களும் புதுமுகங்கள் என்பது தெரியா மல் அந்தந்த பாத்திரங்களில் நுழைந்துக் கொண்டிருக் கிறார்கள்.
எஸ்.சசிகாந்த் தயாரித்திருக் கிறார். புஷ்கர் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பு மேற்கொண்டுள்ளனர். ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர் ரசிகர்களை கதை களத்துக்குள் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறார். கேபர் வாசுகி, அருள்தேவ் இருவரும் இசை யில் காட்சிகளை நனைய விட்டிருக்கின்றனர்.
மீண்டும் இயக்குனர் ஹலிதா ஷமீம்தான் கதைக்கு அச்சாணியாக இருந்து சுழலவிட்டிருக்கிறார் என சொல்லியாக வேண்டும். கிராமத்தின் எதார்த்தங்களை பிசிறு தட்டாமல் காட்சிகளாக மாற்றி இருக்கிறார்கள்.
ஏலே- குச்சி ஐஸ் விற்கும் ஒரு மனிதன் வாழ்க்கை