படம்: வேட்டை நாய்
நடிப்பு: ஆர்,கே,சுரேஷ், ராம்கி, சுபிக்ஷா, நமோ நாராயணா, ரமா, கவுதம், விஜய் கார்த்திக், விஜித் சரவணன், ஜோதி முருகன்
தயாரிப்பு; பி.ஜோதிமுருகன், விஜய் கார்த்திக்,
இசை: கணேஷ் சந்திரசேகரன்
ஒளிப்பதிவு: முனிஸ் ஈஸ்வரன்
இயக்கம்: எஸ்.ஜெய்சங்கர்
ரவுடிகளை வைத்து அடிதடி நடத்தி கட்டபஞ்சாய்த்தி செய்யும் தாதாவாக ராம்கி யிடம் அடியாளாக இருக்கின் றனர் ஆர்.கே.சுரேஷ் மற்றும் ஜோதிமுருகன். இவர்கள் இருவருக்கும் சிறுவயது முதலே மோதல் போக்கு நிலவுகிறது. எல்லா நேரத் திலும் சுரேஷ் வெற்றி பெறுவ தால் அவர் மீது ஜோதி முருகனுக்கு பொறாமை. எப்படியாவது ராம்கியயிடம் ஆர்,கே. சுரேஷின் இடத்தை தான் கைப்பற்ற வேண்டும் என்று ஜோதி முருகன் எண்ணுகிறார். இதற்கிடையில் ஆர்.கே.சுரேஷுக்கு சுபிக்ஷா மீது காதல் பிறக்கிறது. அவருக்கு பெண் தர குடும்பத் தினர் மறுக்கின்றனர். ஆனாலும் அடாவடி செய்து சுபிக்ஷாவை மணக்கிறார். பிறகுதான் சுரேஷ் ராம்கியிடம் அடியாளாக இருப்பதை சுபிக்ஷா அறிகிறார். அவரை விட்டு பிரிந்து வந்து உழைத்து சம்பாதிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார். முதலில் மறுக்கும் சுரேஷ் பின்னர் மெதுவாக ராம்கியிடமிருந்து பிரிந்து வேறு இடத்தில் வேலைக்கு சேர்கிறார். அந்த நிறுவன முதலாளி ஏற்கனவே சுபிக்ஷாவை ஒருதலையாக காதலித்தவர். ஊரார் அவர் களை இணைத்து பேசுகின் றனர். இதனால் குடும்பத்தில் சண்டை எழுகிறது. தன்னை விட்டு பிரிந்த சுரேஷை ராம்கி அழைக்கப்பார்க்கிறார். இந்த குழப்பங்களுக்கு படம் பதில் சொல்கிறது.
பல படங்களில் ஆர்.கே. சுரேஷ் நடித்திருந்தாலும் இப்படம் அவரது நடிப்புக்கு உதாரணம் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.
ராம்கி கண்ணை காட்டினால் அடுத்த கேள்வி கேட்காமல் எதிரில் யார் இருந்தாலும் அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். பெண் பார்க்க்கும் படலம் தொடங்கியவுடன் வெளியூரில் பெண் பார்க்கச் சென்று அங்கு சுபிக்ஷாவை பார்த்ததும் அவரைத்தான் கட்டுவேன் என்று ஒற்றை காலில் நிற்கிறார் சுரேஷ். குடும்பத்தினர் தர மறுத்தும் சுபிக்ஷா பின்னாலேயே சுற்றி அவரை மணந்துகொள்கிறார். திருமணத்துக்குபிறகுதான் குடும்பத்தின் கஷ்டம் சுரேஷுக்கு தெரியவருகிறது. அடியாளாக வேலை செய்து எடுத்துவரும் பணத்தில் சாப்பிடமாட்டேன் என்று சுபிக்ஷா பிடிவாதம் செய்ய சுரேஷ் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுவதும் வயிற்றில் உண்டான கருவை அழிக்க மனைவி செல்லும் போது அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து மனம் திருந்துவது மாக சுரேஷ் பண்பட்ட நடிப்பால் கவர்கிறார். இவர் வேலையை விட்டாலும் ராம்கி அவரை விட மறுத்து அவ்வப்போது வம்புக்கு இழுப்பதும் அதிலிருந்து நைசாக நழுவதுமாக இருக்கும் சுரேஷ் ஒரு கட்டத் தில் ராம்கியிடம் மீண்டும் அடியாளாக மாற மாட்டேன் என்று சொல்லி அவரிடம் அடிவாங்குவதும்,’என்னை நீங்கள் வேட்டை நாய்போல் தானே வைத்திருந்தீர்கள்’ என்று சொல்லி உருகுவதும் சுரேஷ் கதாப்பாத்திரத்தின் மீது ஈர்ப்பை வரவழைக்கிறது.
தனக்கு வேலை கொடுத்த முதலாளி சுபிக்ஷாவை காதலித்தவர் என்று தெரிந் ததும் மனம் உடைந்து நிற்பதும், ஒருவேளை இது மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன் கதையாக மாறிவிடுமோ என்று எண்ணும்போது அதில் ஒரு டிவிஸ்ட் வைத்து மீண்டும் சுரேஷ் ஸ்கோர் செய்கிறார். கிளைமாஸும் எதிர்பாராத வகையில் முடித்தது ஆறுதல்.
ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே எப்படி யொரு பாதிப்பை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தியதோ அந்த உணர்வை வேட்டை நாய் படமும் ஏற்படுத்தும்.
சுரேஷின் எதிரியாக வரும் ஜோதிமுருகன் சரியான நேரத்தில் மனம் திருந்தி மனதில் இடம் பிடிக்கிறார். சுபிக்ஷா, ரமா நிறைவான நடிப்பில் நிறைகின்றனர்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு ராம்கி நடித்திருக்கிறார். இவர் வில்லனா, நல்லவனா என்று கணிக்க முடியாத பாத்திரம் என்று தனது வேட்டத்தை தக்க வைக்கிறார். மனுஷம்ன் 80களில் பார்த்த அதே தோற்றத்தில் இன்னமும் தோற்றத்தை பராமரிப்பது ஆச்சர்யம்.
கணேஷ் சந்திரசேகரன் இசை ஓ கே ரகம். முனிஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு தெளிவு. எஸ்.ஜெய்சங்கர் கதையில் தீவிரம் காட்டி ஜெயித்திருக்கி றார்.
வேட்டை நாய்- நீண்ட நாள் கழித்து ராஜ்கிரண் படம் பார்த்ததுபோன்ற உணர்வு.
next post