Trending Cinemas Now
தமிழ் செய்திகள்

அன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை

நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் இன்று பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. திரையிடல் நிறைவடைந்த பின் படக்குழுவினர் பேசினார்கள்..

நடிகர் அருண்பாண்டியன் பேசும்போது,”அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம். அன்பிற்கினியாள் படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தப்படத்தை நாங்கள் சீக்கிரமாகவே முடித்துவிட்டோம். கொரோனா காரணமாக ரிலீஸ் பண்ண தாமதம். நான் 18 ஆண்டுகளுக்குப் பின் இந்தப்படத்தில் நடித்துள்ளேன். என் மகளோடு நடித்தது நல்ல அனுபவம். எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை இந்தப்படம் ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படத்திற்கு உயிர் கொடுத்தவர் மியூசிக் டைரக்டர் ஜாவித். மிக சிறப்பாக உழைத்துள்ளார். இந்தப்படத்தில் வாழ்ந்தது போன்ற ஓர் உணர்வு. இந்தப்படத்தின் கேரக்டர் போல கிடைத்தால் தொடர்ந்து நிச்சயமாக நடிப்பேன். ஒரு நல்லபடத்தை எடுத்துள்ளோம். படத்திற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

இயக்குநர் கோகுல் பேசியதாவது:

இந்தப்படம் எனக்கு ஒரு புது ஜானராக இருக்கும் என நினைத்து செய்தேன். அருண்பாண்டியன் சார் இந்தப்படத்தின் மலையாள வெர்சனை காண்பித்து டயலாக் எழுதச் சொன்னார். படம் பார்த்து முடித்ததும் எனக்கு பிடித்துப்போனதால் .நான் அருண்பாண்டியன் சாரிடம் படத்தை நானே செய்கிறேன் என்று வாய்ப்பைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். கீர்த்தி பாண்டியன் இந்தப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரின் நடிப்பு இந்தப்படத்தைத் தூக்கிப்பிடித்திருக்கிறது. எங்களுக்கு இந்தப்படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. ஸ்பாட்டிலே அவர் நிறையமுறை கைத்தட்டல் வாங்கினார். அருண்பாண்டியன் சார் மிக சிறப்பான உழைப்பைக் கொடுத்து நடித்தார். ஜாவித் நான் வேலை செய்த இசை அமைப்பாளர்களிலே ஒன் ஆப் த பெஸ்ட் இசை அமைப்பாளர். இந்தப்படத்தில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. படத்தில் எல்லாப்பாடல்களையும் லலித் ஆனந்த் நன்றாக எழுதியிருக்கிறார். மீடியா எப்போதும் நல்லபடங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தவறியதே இல்லை. இந்தப்படத்தையும் மக்களிடம் மீடியா சரியாக கொண்டு சேர்க்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி ” என்றார்

சக்தி பிலிம்பேக்டரி சக்திவேலன் பேசியதாவது:

“நல்ல படங்களுக்கு ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருகிறார்கள் என்றால் அதற்கான காரணம் மீடியா தான். உங்களின் எழுத்தின் மூலமாக இந்தப்படத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

நடிகை கீர்த்தி பாண்டியன் பேசியதாவது:

“இந்தப்படத்தை மிக அன்போடு எடுத்திருக்கோம். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. மேலும் படம் ப்ரீசரில் ஷுட் பண்ணும் போது நிறைய சவால்களைச் சந்தித்தோம். அதற்கான நல்ல ரிசல்ட்டை மக்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

இசை அமைப்பாளர் ஜாவித் பேசியதாவது:

“இந்தப்படத்தில் நான் நன்றாக வேலை செய்துள்ளாக சொன்னார்கள். அதற்கான காரணம் அருண்பாண்டியன் சாரும் கோகுல் சாரும் கொடுத்த சுதந்திரமும் நம்பிக்கையும் தான். இந்தப்படத்தில் வேலை செய்ததை பெரும் கிப்டாக நினைக்கிறேன். இந்தப்படத்திற்கு நல்ல ஆதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் பிரவின் பேசியதாவது:

“எனக்கு இந்தப்படம் தான் என் கரியரின் ஆரம்பம். எனக்கு வாய்ப்பளித்த அருண்பாண்டியன் சாருக்கும் கோகுல் சாருக்கும் மிக்க நன்றி. படத்தை நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். கீர்த்தி பாண்டியன் படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார். அனைவருக்கும் நன்றி” என்றார்

Related posts

புதிய திரைக்கதை பாணியில் உருவாகும் ‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி

Jai Chandran

இலங்கை மக்கள் புரட்சி: அதிபர் கோத்தபய தப்பி ஓட்டம்

Jai Chandran

ஜெய்சங்கர் வாழ்க்கை புத்தகம்: சத்யராஜிடம் வழங்கினார் விஜய் சங்கர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend