Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் விமர்சனம்

தூக்கு துரை (பட விமர்சனம்)

படம்: தூக்கு துரை

நடிப்பு: யோகிபாபு, மகேஷ், பால சரவணன், மொட்டை ராஜேந்திரன்,  சென்றாயன் மாரிமுத்து, நமோ நாராயணா , இனியா

இசை: கே.எஸ்.மனோஜ்

ஒளிப்பதிவு: ரவி வர்மா

இயக்கம்: டென்னிஸ் மஞ்சுநாத்

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா

ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து, நமோ நாராயணா. இதில் மாரிமுத்துக்குத்தான் ஊர் மக்கள் மரியாதை தருகிறார்கள். இதனால் அண்ணன் மீது நமோ நாராயணனுக்கு பொறாமை. ஊரில்.நடக்கும் திருவிழாவின் போது சினிமா படம்.காட்ட வருகி றார் யோகி பாபு. அவருக்கும் மாரிமுத்து மகள் இனியாவுக்கும் காதல்.மலர்கிறது. ஊர் திருவிழா வின்போது சாமிக்கு சூட்ட தங்க கிரீடம் மாரிமுத்து வீட்டில் இருக் கிறது. அதை எடுத்துக் கொண்டு யோகி பாபுவும், இனியாவும் ஊரைவிட்டு ஓடுகின்றனர். ஆனால் அவர்களை மடக்கி பிடிக்கும் மாரிமுத்துவின் ஆடியாட்கள் யோகி பாபுவை அடித்து கிணற்றில் வீசி எரித்து கொல்கின்றனர். பின்னர் பேயாக வரும் யோகிபாபு ஊர்மக்களையும் மாரிமுத்து குடும்பத்தையும் பயமுறுத்துகிறார். இந்நிலையில் கிணற்றில் கிடக்கும் தங்க கிரீடத்தை எடுக்க சென்றாயன் தனது நண்பர்கள் மகேஷ், பால சரவணனை அழைத்து வருகிறார்.  அவர்களால் கிரீடத்தை எடுக்க முடிந்ததா? யோகி பாபு பேய் இனியாவை என்ன செய்தது என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

யோகி பாபு ஏற்கனவே சில படங்களில்.பேயாக நடித்திருக் கிறார். அதில் இல்லாத ஒரு அமர்க்களத்தை இப்படத்தில் காட்டியிருக்கிறார்.

ஊர்மக்கள் அடித்து தூக்கி கிணற்றில் போட்டு எரித்த அன்று இரவே இனியா வீட்டுக்கு யோகிபாபு பேயாக வருவதும் இனியாவை. ஜன்னல் அருகே நின்று அழைத்து ஒரு வழி செய்ய. பார்ப்பதும் லேசான  அச்சத்தை தருகிறது.

கிணற்றிலிருந்து கிரீடத்தை எடுக்க வரும் மகேஷ், பால சரவணன் , சென்றாயன் ஆகியோரை யோகி பாபு பேயாக வந்து பயமுறுத்துவது திகில் இல்லாமல் படமாக்கி இருப்ப தால்.குழந்தைகளும் ரசிக்க முடிகிறது.

“நான் கிரீடத்தை எடுக்கிறேன்” என்று மொட்டையை  தடவிக் கொண்டு மொட்டை ராஜேந்திரன்  வந்ததும்  கலகலப்பு டபுள் ஆகிறது. தண்ணி இல்லாத அந்த கிணற்றில் மகேஷ், ராஜேந்திரன், சரவணன்,  அஸ்வின் ஆகியோரை யோகி பாபு பேய் பிரித்து மேய்வது. அரங்கை கலகலப்பாக்குகிறது..

மாரிமுத்து அழைத்து வந்த மந்திர வாதி யோகி பாபு பேயை சொம்பில் அடைத்து  கிணற்றில் போட்ட பிறகு இனி அந்த பேய் வராது என்று மந்திரவாதி கூறுகி றார். ஆனால் அந்த சொம்பை மொட்டை ராஜேந்திரன் எடுத்து வெளியில் போடும்போது கூட அது மூடித்தான் இருக்கிறது ஆனாலும் யோகி பாபு பேய் எப்படி அலப்பறை செய்கிறது என்பதுதான் புரிய வில்லை.

யோகி பாபுக்கு ஜோடியாக இனியா நடித்திருக்கிறார். இது புதுசா இருக்கே   என்று யோசிப்ப தற்குள் யோகி பாபுவை கொன்று பேய் ஆக்கி விடுகிறார் இயக் குனர்.

மறைந்த மாரிமுத்து படத்தில்  அடிக்கடி சாவு பற்றி  பேசி பேசியே  செண்டிமெட்டாக அவருக்கு  நிஜத்தில் அப்படி ஆகிவிட்டதோ என்று  எண்ணத் தோன்றுகிறது.

கே.எஸ்.மனோஜ் இசை அமைத் திருக்கிறார். ரவி வர்மா ஒளிப்ப திவு செய்துள்ளார். இருவரின் பங்களிப்பும் இன்னும்.கூட அதிகம் இருந்திருக்கலாம்

பேய் கதையை இயக்க வேண்டும்,  அது பயமுறுத்தாத காமெடி பேயாக இருக்க வேண்டும் என்று யோசித்து யோசித்து இயக்குனர்  டென்னிஸ் மஞ்சுநாத் காட்சிகளை  அமைத்திருக்கிறார்.

தூக்கு துரை – காமெடி பேய்.

 

 

 

 

Related posts

Dosti, Natpu, Priyam in 5 Languages

Jai Chandran

100 Days Historical Victory of #LoveToday Celebration:

Jai Chandran

“கே டி தி டெவில்” டைட்டில் டீஸர் பிரமாண்ட ரிலீஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend