Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பெத்தி (பட விமர்சனம் )

படம்: பெத்தி

நடிப்பு : ராம்சரண்  ஜான்வி கபூர் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு,,  திவ்யேந்து சர்மா, பொமன் இராணி

தயாரிப்பு: வெங்கட சதீஷ் கிலாரு

இசை: : A.R. ரஹ்மான்

ஒளிப்பதிவு: : R. ரத்னவேலு

இயக்கம்: புச்சி பாபு சனா

பிஆர்ஓ : யுவராஜ்

கதை : மலை கிராம பகுதியில்  மலைவாழ் மக்கள் ஒரு பிரிவாகவும் மற்றொரு சமூகம் இன்னொரு பிரிவாகவும் வாழ்கின்றனர். இரு சமூகத்தினரும் ஒரே வேலை செய்தாலும் மலைவாழ் தொழிலாளர்களுக்கு பாதி சம்பளமும் மற்றொரு சமூகத்திற்கு இரட்டிப்பு சம்பளமும் தரப்படுகிறது. மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெத்தி ( ராம்சரண் ) மற்ற யாரையும் மிஞ்சும் திறமை வாய்ந்தவனாக இருக்கிறான். கிரிக்கெட் போட்டி, மல்யுத்த போட்டி எல்லாவற்றிலும் அவனை வீழ்த்த யாரும் கிடையாது. இதற்கிடையில்  மலைவாழ் மக்கள் தங்கள் ஊருககென்று ஒரு ரயில் நிறுத்தம் வேண்டுமென்று பல்லாண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர். அது நிறைவேறாமல் இருக்கிறது. விளையாட்டுப் போட்டியில் உலக அளவில் சாதனை படைக்கும் பெத்தி தனது ஊருக்காக செய்யும் தியாகம் என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்

முழுக்க முழுக்க ராம்சரணின் ஹீரோயிசத்தை மையப்படுத்தி  விளையாட்டை ஊக்கப்படுத்தும் கதையாக பெத்தி உருவாகி இருக்கிறது. கிரிக்கெட்டர், மல்யுத்த வீரர்,  மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரர் என மூன்று விளையாட்டு வீரர் வேடத்தில் நடித்திருக்கிறார். ராம் சரண்.

ஒரு நபர் ஒரு சமயத்தில் ஒரு விளையாட்டு திறமையை கொண்டவராக காட்ட முடியும் என்பது எதார்த்தமாக இருந்தாலும் இந்த படத்தை பொறுத்தவரை ஒரே நபர் 3 விளையாட்டில் திறமை வாய்ந்தவராக இருக்கிறார்  என்று  கதையை யோசித்திருப்பதே இயக்குனரின் வித்தியாசமான பார்வையாக அமைந்திருக்கிறது

கிரிக்கட்டர் வேடத்தில் வரும் ராம்சரண் கிரிக்கெட் பேட்டை தரையில் தட்டி பல்வேறு திசைகளில் பந்தை சிக்சர் அடித்து தள்ளுவதும், மலை போன்று பெருத்த உடல் கட்டுடன் இருக்கும்   வீரர்களுடன் ராம்சரண் ஒற்றையாளாக மல்யுத்த போட்டியில் மோதுவதும அபாரம். மாற்றுத்திறனாளியாக ராம்சரண் ஓட்டப்பந்தய களத்தில் நடத்தும் சாகசம் பரபரக்கிறது.

கதாநாயகியாக ஜான்வி கபூர்.  முழுக்க முழுக்க   கவர்ச்சி நாயகியாகவே  மனதில் பதிகிறார்

சிவராஜ் குமார் மல்யுத்த வாத்தியாராக நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு எளிமையான தோற்றத்தில் இருந்தாலும் அவரது பார்வையும், ஆக்ஷனில் காட்டும் விறுவிறுப்பும் அவரை மலயுத்த வாத்தியாராக ஒப்புக்கொள்ள வைக்கிறது.

ஜெகபதி பாபு பெரும்பாலும் வில்லன் வேடத்தில் படங்களில் நடித்திருக்கிறார் இந்த படத்தை பொருத்தவரை அவர்  சிவப்பு சிந்தனை போராளியாக நடித்திருப்பது எதிர்பாராத ஷாக்.

வெங்கட சதீஷ் கிலாரு படத்தை தயாரித்திருக்கிறார்.

A.R. ரஹ்மான் இசை புது வேகத்தை காட்சிகளுக்கும் பாடல்களுக்கும் தந்திருக்கிறது.

R. ரத்னவேலு கேமராவில் லென்ஸ்க்கு பதிலாக ரசிகர்களின் கண்களை பொருத்தி காட்சிகளை விருந்து படைத்திருக்கிறது

இயக்குனர் புச்சி பாபு சனா விளையாட்டை மையமாக வைத்து இப்படி  ஒரு பார்முலாவை உருவாக்கி கமர்சியல் படத்தை தர முடியும் என்பதை நெத்தியடியாக நிரூபித்திருக்கிறார்.

பெத்தி – ரசிகர்களை ஏமாற்றாது

Review By

K. Jayachandhiran

Trending cinemas now. com

 

 

 

 

 

Related posts

Prime Video Sets May 22 Premiere Date for System,..

Jai Chandran

Varalatchumi’s KANNITHEEVU Teaser

Jai Chandran

ராஷ்மிகா நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” திரைபடம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend