படம்: சட்டம் என் கையில்
நடிப்பு: சதீஷ், அஜய் ராஜ், பாவல், ரித்திகா, மைம் கோபி, கே பி ஒய் சதீஷ், வித்யா பிரதீப், பவா செல்லதுரை, ராமதாஸ், அஜய் தேசாய்
தயாரிப்பு: பரத்வாஜ் முரளி கிருஷ்ணன், ஆனந்த கிருஷ்ணன் சண்முகம், ஸ்ரீராம் சத்ய நாராயணன்
இசை: ஜோன்ஸ் ரூபர்ட்
ஒளிப்பதிவு: பி ஜி.முத்தையா
இயக்கம்:சாச்சி
பிஆர்ஓ: சதீஷ் ( AIM)
ஏற்காட்டிற்கு மலைப் பாதையில் காரில் வருகிறார் சதீஷ். குறுக்கே வரும் மோட்டார் சைக்கிள் மீது கார் மோத அதில் வரும் நபர் இறக்கிறார். அந்த நபரின் உடலை கார் டிக்கியில் வைத்துக்கொண்டு சதீஷ் புறப்படுகிறார். போலீஸ் சோதனைக்காக காரை நிறுத்தச் சொல்லும்போது நிற்காமல் செல்கிறார். போலீஸ் துரத்திப் பிடித்து அவரையும் காரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வருகிறது. இதற்கிடையில் போலீஸ் ஒருவரையும் சதீஷ் கன்னத்தில் அறைந்து விடுகிறார். அடிவாங்கிய போலீஸ் சதீஷை பல கேஸ் போட்டு பலிகடா ஆக்க எண்ணுகிறார். இதற்கிடையில் மற்றொரு பெண் மர்மக்கொலை விவகாரமும் போலீசுக்கு வருகிறது. போலீஸ் அதில் கவனம் செலுத்தும் போது சதீஷ் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தப்ப முயல்கிறார் அதன் பிறகு நடப்பதெல்லாம் எதிர்பார்க்காத சம்பவங் களாக அமைகிறது. இறுதியில் சதீஷன் கதி என்னவாகிறது என்பது கிளைமாக்ஸ்.
ஹீரோக்களுடன் தோழனாக நடித்து காமெடி செய்து வந்த சதீஷ் சந்தானம் பாணியில் ஹீரோவாக மாறி நடித்து வருகிறார் அந்த வரிசையில் சதீஷுக்கு மற்றொரு படமாக இது அமைந்திருக்கிறது.
முதல் காட்சியில் கார் ஓட்டி வந்து போலீஸ் பிடியில் சிக்கி ஸ்டேஷனில் உட்காரும் சதீஷ் கிட்டத்தட்ட இறுதிக்காட்சி வரை அதே ஸ்டேஷனில் காலத்தை கழிக்கிறார். கார் டிக்கியில் மறைத்து வைத்திருக்கும் பிணத்தை போலீசார் கண்டு பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் அவ்வப்போது சில தில்லு முல்லு வேலைகளை செய்து குழப்பும் வேலைகளையம் செய்கிறார். .
போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டருக்கும், மற்றொரு போலீசாக வரும் பாவலுக்கும் இடையே நடக்கும் ஈகோ பிரச்சினை காட்சிகளை விறுவிறுப்பு பாதைக்கு திசை திருப்பி செல்கிறது.
பெண்ணை மர்மமாக கொலை செய்தது யார், அந்தப் பெண்ணுக்கும் சதீஷுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்விகள் அடுத்தடுத்து காட்சிகளை கிளைமாக்ஸ் வரை ஜிவ்வென்று நகர்த்தி செல்கிறது.
கிரைம் கதை என்பதால் முழுக்க முழுக்க அதில் மட்டுமே இயக்குனர் சாச்சி கவனம் செலுத்தி இருப்பதால் காட்சிகளில் திருப்பங்களை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். நல்லவேளையாக காதல் சீனை வைத்து .காட்சிகளுக்கு ஸ்பீட் பிரேக் போடவில்லை
பரத்வாஜ் முரளி கிருஷ்ணன், ஆனந்த கிருஷ்ணன் சண்முகம், ஸ்ரீராம் சத்ய நாராயணன் தயாரித்திருக்கின்றனர். .
ஜோன்ஸ் ரூபர்ட் இசை, பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு ஓகே.
சட்டம் என் கையில் – திருப்பங்கள் நிறைந்த க்ரைம் ஸ்டோரி

