படம்: கான்ஜுரிங் கண்ணப்பன்
நடிப்பு: சதீஷ், ரெஜினா, நாசர், சரண்யா, விடிவி கணேஷ், நமோ நாராயணா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ். எல்லி அவ்ராம், ஆதித்யா கதிர், ஜான்சன் ஷா, பெண்டிக்ட் காரட்
தயாரிப்பு: கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ்
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: எஸ்.யுவா
இயக்கம்: செல்வின் ராஜ் சேவியர்
பி ஆர் ஒ :நிகில் முருகன்
தாய், தந்தையுடன் வசிக்கும் கண்ணப்பனுக்கு பறவை இறகு களுடன் கூடிய பழங்கால மாலை ஒன்று கிடைக்கிறது. அதில் உள்ள ஒரு இறகை விளையாட்டுத்தன மாக கண்ணப்பன் பீய்த்து விட அன்றுமுதல் தூக்கத்தில் அவருக்கு பேய் கனவு வருகிறது. முதலில் அதுபற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாத கண்ணப்பன் தொடர்ச்சியாக ஒரே கனவு வருவதும் அதில் பேய் மிரட்டு வதும் சந்தேகத்தை ஏற்படுத்து கிறது. இதுபற்றி பேய் ஆராய்ச்சி யாளரிடம் விவரம் சொல்ல அவர் அதுபற்றி விளக்குகிறார். குறிப் பிட்ட மாலை ட்ரீம் கேப்சர். அதில் ஒரு செய்வினை பொம்மை இருக் கிறது. அதனால்தான் இதெல்லாம் நேர்கிறது. கனவு.பங்களாவுக்குள் செல்லும் போது அங்கிருக்கும் சாவியை எடுத்தால்தான் இந்த சிக்கலிலிருந்து மீள முடியும் என்கி றார். இந்நிலையில் கண்ணப்பன் குடும்பத்தினரும் மற்றும் வட்டிக் காரர், டாக்டர் உள்ளிட்டவர்களும் இந்த கனவுலகில் சிக்கி விடுகின் றனர். அவர்களால் அதிலிருந்து மீள முடிந்ததா என்பதற்கு காமெடி திகிலுடன் பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.
பங்ளாவுக்குள் சிக்கிக் கொள் வதும் அவர்களை பேய் மிரட்டு வது அதனிடமிருந்து அவர்கள் தப்புவது என்ற வழக்கமான பார்முளாதான் இந்த படத்திலும் அப்ளை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு புது வடிவம் தர ட்ரீம் கேப்சர் என்ற புது பெயிண்ட் அடித்திருக்கிறார்கள் மற்றபடி வழக்கமான பேய் மிரட்டலை சந்தானம் காமெடி பேய் படம் போல் புகுத்தி காமெடி கான்ஜூரிங் கண்ணப்பனாக படத்தை இயக்கியிருக்கிறார் செல்வின் ராஜ் சேவியர்.
படத்தில் கண்ணப்பனாக வேடம் ஏற்றிருக்கும் சதீஷ் நல்லவேளை முழுக்க சந்தானம் பாணிக்கு மாறாமல் தன் பாணியை கையாண்டிருப்பதால் காட்சிகளில் மாறுபாடு தெரிகிறது.
தூங்கும் போது பேய் கனவு வருவதை தவிர்க்க நாள் கணக் கில் கண் விழித்திருக்க சதீஷ் குடும்பம்படும் அவஸ்த்தைதான் படத்தில் நகைச்சுவைகளை தெறிக்க விடுகிறது.
சதீஷ், விடிவி கணேஷ், ஆனந்தராஜ், சரண்யா, ரெடின் என ஒரு கூட்டமே ஏதோ பிக்னிக் செல்வதுபோல் கனவு பேய் பங்ளாவுக்குள் சென்று வருவதும், அலறியடித்து எழுவதெல்லாம் அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்துகிறது.
பேய் ஆராய்ச்சி நிபுணர்களாக நாசர், ரெஜினா நடித்துள்ளனர். பாட்ஷாவரை பயங்கர வில்லனாக நடித்து வந்த ஆனந்தராஜ் தற்போது முழுசாக காமெடி ராஜாக மாறி.இருக்கிறார்.
ஏ ஜி எஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ். தயாரித்திருக்கி றார்கள்.
பேய் பங்களா கதை என்றாலும் புதுமெருகுடன் ரசிக்க வைத்திருக் கிறார் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர். படத்திற்கு உயிர் கொடுத் திருப்பது யுவனின் பின்னணி இசைதான் இசையில்லாமல் இப்படம் உயிரற்ற உடல். அதே போல் ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா நிஜத்திற்கும் கனவுக்கும் கலர் டோவுனில் வேறுபாடு காட்டி இருப்பது ஓகே.
கான்ஜூரிங் கண்ணப்பன் – கலகலப்பு மெய்யப்பன்.