Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஹார்ட்டிலே பேட்டரி (வெப் சீரிஸ் விமர்சனம்)

படம்: ஹார்ட்டிலே பேட்டரி (வெப் சீரிஸ்)

நடிப்பு: குரு லஷ்மன், பாடினி குமார் மற்றும் பலர்

தயாரிப்பு: zee5 ஒரிஜினல்

எழுத்து இயக்கம்:
சதாசிவம் செந்தில் ராஜன்

வெளியீடு: ZEE5 OTT

பி ஆர் ஓ: சதீஷ் (AIM)

காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது பெற்றோர் திடீரென்று சண்டை போட்டுக் கொண்டு பிரிகின்றனர். இதை நேரடியாக பார்த்து மனதளவில் பாதிக்கும் மகள் சோபியா காதல் என்பது விஞ்ஞான ரீதியான
உயிரியல் மற்றும் வேதியியல் கலவை என்கிறாள். மேலும் காதல் கருவி ஒன்றையும் கண்டுபிடிக்கிறாள். அதில் விரல் ரேகை வைத்தால் ஒருவர் மீது எவ்வளவு காதல் நமக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும். அந்தக் கருவியை தனது பாய் ஃப்ரெண்ட் சித்திடம் கூறுகிறாள். சித்துவோ காதல் என்பது உணர்வுகள், உள்ளுணர்வு என்று நம்புகிறான். அவரிடம் தனது காதல் கருவி பற்றி கூறிய சோபியா  தனக்கு யாருமே இல்லை என்று சொல்லி வருந்தும்போது அவளுக்கு தான் இருப்பதாக ஆறுதல் கூறுகிறான் சித். இவர்களின் இந்த நட்பு காதலில் முடிகிறதா? அல்லது இவர்களின் காதலை சோபியா கண்டுபிடித்த காதல் கருவி உறுதிப்படுத்துகிறதா என்பதை எல்லாம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து சொல்லப்படுகிறது.

காதல் பற்றி நிறைய படங்கள் வந்திருந்தாலும் அல்லது நிறைய சீரியல்கள் வந்திருந்தாலும் மனதிற்குள் எவ்வளவு காதல் இருக்கிறது என்பதை பர்சன்டேஜ் போட்டு காட்டும் ஒரு கருவியை இதுவரை எந்த படத்திலும் காட்டியதாக நினைவில்லை. அப்படி ஒரு புதுமையான கருவியை இந்த வெப் சீரிஸில் மையமாக வைத்து காட்சிகளை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
முதல் மூன்று எபிசோட் களிலேயே ரசிகர்களை கதைக்குள் இழுத்து விடும் ஈர்ப்பான காட்சிகளை வைத்திருப்பது காட்சிகளை எப்படி நகர்த்தப் போகிறது என்பதை பார்ப்பதற்கான ஆவலை தூண்டுகிறது.

சித்.கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குரு லஷ்மன், சோபியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாடினி குமார் புதுமையான கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருப்பது காட்சிகளில் ஒன்ற வைக்கிறது.

zee5 ஓடிடி தளம் வித்தியாசமான வெப் சீரிஸ்களை ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வரிசையில் ஹார்ட்டிலே பேட்டரி வெப்சீரிஷும் இடம் பிடிக்கும் எதிர்பார்க்கலாம்.

ஹார்டிலே பேட்டரி – டைட்டில்போல் கதையும் வித்தியாசமானது.

Review by
K.Jayachandhiran

trending cinemas now.com

Related posts

‘தி ஐ’ சர்வதேச படத்தில் ஸ்ருதிஹாசன்

Jai Chandran

Arun Vijay’s son Arnav Vijay starts dubbing for his debut movie

Jai Chandran

VVSTrailer crosses 2 million+ views on YouTube

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend