படம்: அவள் பெயர் ரஜ்னி
நடிப்பு: காளிதாஸ் ஜெயராம், நமீதா.ப்ரமோத், ரெபா மோனிகா, அஸ்வின்குமார், சஜு க்ரூப், கருணாகரன், ரமேஷ் கண்ணா
தயாரிப்பு: ஶ்ரீ ஜித் கே எஸ்., பிளஸ்ஸி ஶ்ரீ ஜித்
இசை: 4 மியூசிக்
ஒளிப்பதிவு; ஆர் ஆர் விஷ்ணு
இயக்கம்: வினில் ஸ்கார்யா வர்கிஸ்
பி ஆர் ஒ: சதிஷ் ,(AIM), சிவா
காரில் கணவன் மனைவி வந்து கொண்டிருக்க காட்டு வழியில்.கார் நிற்கிறது. காரில் டீசல் இல்லாத தால் டீசல் வாங்கி வர செல்லும் கணவன் தன் மனைவியை காரில் இருக்கும்படி சொல்கிறான் அடுத்த சில.நொடிகளில் கார் மீது ஏதோ விழுந்ததுபோன்று பெரிய சத்தம்.கேட்க காருக்குள் இருந்த பெண் வெளியில் இறங்கி ஓடுகிறார். தூரத்திலிருந்து பார்த்த போது கார் மீது தனது கணவன் கொலை செய்யப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறாள். இதுபற்றி போலீஸ் விசாரணை தொடங்குகிறது. கொலை செய்தது யார் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கொலை செய்தது ஒரு ரஜினி ரசிகன் என்று கதைக்கு புதுமுடிச்சி போடுகி றார்கள். இதன் முடிவு என்ன என்பது சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவெடுக்கிறது.
ஒரு திரில்லர் படத்தை ரஜினி பெயருடன் தொடர்புபடுத்தி எடுத்திருப்பது சற்று வில்லங்கம் மென்றாலும் ரஜினி பாப்ளாரிட் டியை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இயக்குனர். இதற்கு ரஜினியிடம் அனுமதி பெறவில்லை என்பதுதான் ஒரேகுறை..
ஒரு பெண்தான் கொலை செய்தார் என்று கிளப்பிவிட்டு படத்தின் முக்கால்வாசி பகுதியை த்ரில்லா கவும் கிளுகிளுப்பாகவும் நகர்த்தி செல்லும். இயக்குனர் திடீரென்று தரும் டுவிஸ்ட் பலருக்கு ஷாக் சிலருக்கு யூகத்துக்கு கிடைக்கும் சக்சஸ்.
படத்தின் பிற்பகுதி ரஜினி படம்,. போஸ்டர், கட்டவுட் , ரசிகர்கள் பாலாபிஷேகம் என்று களைகட்டு கிறது. ஆனால் ரஜினி கட்டவுட்டை கீழே சரித்து சண்டை காட்சி அமைத்திருப்பதுதான் ரஜினி ரசிகர்களை நெருட வைக்கும்
கொலையாளியை தேடி புறப்படும் காளிதாஸ் ஜெயராம் மலையாள ஹீரோ பாணியில் எதார்த்தமாக நடித்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அஸ்வின்குமார் தன் பங்கை சரியாக செய்திருக் கிறார்.
ஶ்ரீ ஜித் கே எஸ்., பிளஸ்ஸி ஶ்ரீ ஜித் தயாரித்திருக்கிறார்கள்
இயக்குனர் வினில் ஸ்கார்யா வர்கிஸ் மம்முட்டியின் மலையாள பட பேட்டனில் படத்தை இயக்கி உள்ளார். கதை ஒ கே என்றாலும் பேர் சொல்லும் அளவுக்கு பெரிய நடிகர் இல்லாதது மைனஸ்.
4 மியூசிக் இசையும், ஆர் ஆர் விஷ்ணு ஒளிப்பதிவும் கை கொடுத்திருக்கிறது.
அவள் பெயர் ரஜ்னி – மர்டர் மிஸ்ட்ரி.