Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சின்னத்திரை பிரமாண்ட கலை மற்றும் விருது வழங்கும் விழா

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள்‌ சங்கம்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள்‌ சங்கம்‌ ஆரம்பித்து 23ஆண்டுகளாக மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

அதை சிறப்பிக்கும்‌ வகையில்‌ CD-23 என்ற பெயரில்‌
பிரம்மாண்டமான கலை விழா மற்றும்‌ விருதுகள்‌ வழங்கும்‌
விழா 30.7.2025 அன்று சென்னை, நேரு உள்‌ விளையாட்டு
அரங்கில்‌ மாலை 4 மணி முதல்‌ நடக்க இருக்கிறது.

இந்த விழாவில்‌ திரைப்படத்‌ துறை மற்றும்‌ சின்னத்திரையை
சேர்ந்த பிரபல இயக்குநர்கள்‌, எழுத்தாளர்கள்‌, தயாரிப்பாளர்கள்‌.
நடிகர்‌, நடிகைகள்‌ இசையமைப் பாளர்கள்‌, நடன கலைஞர்கள்‌,
சண்டை பயிற்சி கலைஞர்கள்‌, ஒளிப்பதிவாளர்கள்‌,
ஒலிப்பதிவாளர்கள்‌, பாடலா சிரியர்கள்‌, பாடகர்கள்‌, தயாரிப்பு
நிர்வாகிகள்‌, ஒப்பனை கலை ஞர்கள்‌, தையற்‌ கலைஞர்கள்‌
மற்றும்‌ அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும்‌ கலந்து
கொள்ள இருக்கிறார்கள்‌. தென்னிந்திய திரைப்பட
தொழிலாளர்கள்‌ சம்மேளனம்‌ மற்றும்‌ தமிழ்நாடு சின்னத்திரை

கலைஞர்கள்‌ கூட்டமைப்பில்‌ உள்ள அனைத்து, உறுப்பினர்களும்‌ கலந்துகொள்கின்றனர்‌.

இந்த விழாவில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளை பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் நடத்துகிறார் இசை நிகழ்ச்சி களை பிரபல இசை அமைப் பாளர் ஸ்ரீகாந்த் தேவா நடத்து கிறார்

மேடையில் நடைபெறும் வீர விளையாட்டு நிகழ்ச்சிகளை பிரபல சண்டை பயிற்சியாளர்கள் பாண்டியன் மாஸ்டர் மற்றும் தவசி மாஸ்டர் நடத்துகிறார்கள்
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பிரபல திரைப் பட மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் நடத்துகிறார்கள்
தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்த திரைப் படம் மற்றும் சின்னத்திரை நட்சத்திர தம்பதிகள் பங்கு பெற்று வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்
படம் மற்றும் சின்னத்திரை பிரபல இயக்கு னர்கள் உருவாக்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த விழாவில் இடம் பெறும்.
இந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இயக்குபவர் டைரக்டர் எஸ்டி சபா

திரை மற்றும் சின்னத்திரையில் சாதனை கள் நிகழ்த்திய சிறந்த கலைஞர் களுக்கு இந்த விழா மேடையில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர் சங்க உறுப் பினர்களை இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்களுக்கும் வாய்ப்பளித்துக் கொண்டிருக்கும் தொலைக் காட்சி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி நன்றி செலுத்தப்படும்.

ஒவ்வொரு நிமிடமும் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வை யாளர்களுக்கு சிறந்த பொழுது போக்கு அம்சங் களுடன் கூடிய நிகழ்ச்சியாக இது அமையும். மேலும் இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது அதை பார்க்கும் கோடிக்கணக்கான தமிழர் களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும் எல்லா நிகழ்ச்சி களும் அமைக் கப்பட்டிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்
இவ்வாறு தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

 

Related posts

குட் டே (பட விமர்சனம்)

Jai Chandran

சமபந்தி கறி விருந்து அளித்த நடிகர் விஷால்….

Jai Chandran

சாகச நகைச்சுவை படமான “பெடியா” டிரைலர் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend