Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சென்னை ஃ பைல்ஸ் முதல் பக்கம் (பட விமர்சனம்)

படம்: சென்னை ஃ பைல்ஸ்
முதல் பக்கம்

நடிப்பு : வெற்றி,  ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா

தயாரிப்பு: மகேஸ்வரன் தேவதாஸ்
:
இசை:ஏ ஜி ஆர்

ஒளிப்பதிவு: அரவிந்த்

இயக்கம்: அனீஸ் அஷ்ரஃப்

பி ஆர் ஒ: நிகில் முருகன்

க்ரைம் கதை எழுத்தாளர் மகன் வெற்றி, தன் தந்தையின் வாழ்க்கை பற்றி பத்திரிகையில் கட்டுரை எழுத சென்னை வருகிறார். அங்கு இன்ஸ்பெக்டர் தம்பி ராமையா பழக்கமாகிறார். நகரில் மர்மமான கொலைகள் நடக்கின்றன. அந்த கொலைகளை துப்பறிய முடியாமல் தம்பி ராமையா திணற தனது அறிவுத் திறமையை பயன்படுத்தி கண்டுபிடிக்கிறார் வெற்றி. முகம் சிதைத்து கொல்லப்படும் வழக்கில் வெற்றி போடும் ஸ்கெட்ச்சிலிருந்து கொலைகாரன் தப்பிக்கிறான். அவனை வெற்றியால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதற்கு பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

புத்திசாலித்தனமாக துப்பறியும் வேலைகளை சர்வ சாதாரணமாக செய்து விடுகிறார் வெற்றி. ஒருபெண்ணின் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கை கொலை செய்யப்பட்டவரின் நண்பர்களுக்கு. டீ வாங்கிக்கொடுத்து அந்த கிளாசில் பதியும் கைரேகையை வைத்து கொலையாளியை வெற்றி கண்டுபிடிப்பது அட..சூப்பரு என்று ஆர்வத்தை தூண்டி விடுகிறது. ருத்ரா என்ற படத்தில் திருடனாக நடித்த கே பாக்யராஜ் இப்படிப்பட்ட துப்பறியும் வேலைகள் செய்தது ஞாபகத்துக்கு வருகிறது
.
ஒவ்வொரு கொலையின் பின்னணியையும் வெற்றி வெகு எளிதாக கண்டுபிடிப்பது காட்சிகளை சுவாரஸ்யமாக்குகிறது. அதைக்கண்டு தம்பி ராமையா ஆச்சர்யப்படுத்துவது காட்சிகளுக்கு பில்டப் சேர்க்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் மகேஷ் தாஸ் கிளைமாக்சில் தனது சிக்ஸ்பேக் கட்டுமஸ்த்தான உடற்கட்டை காட்டி மிரள வைக்கிறார்.

வெற்றிக்கும் வில்லனுக்கும் நடக்கும் சண்டை காட்சியை இன்னும் கூட அதிரடியாக படமாக்கி இருக்கலாம். எப்படியோ புலன்விசாரணையில் சரத்குமார் கிடைத்ததுபோல் முதல்பக்கத்தில் ஒரு கட்டுமஸ்த்தான வில்லன் தமிழுக்கு கிடைத்திருக்கிறார்.

மகேஸ்வரன் தேவதாஸ் படத்தை தயாரித்திருப்பதுடன் கட்டுமஸ்தான வில்லனாக. நடித்திருக்கிறார்.
:
ஏ ஜி ஆர் இசை அளவுடன் ஒலிக்கிறது.
அரவிந்த் ஒளிப்பதிவு கைகொடுக்கிறது.

அனீஸ் அஷ்ரஃப் இந்த ஸ்கிரிப்ட்டை பல முறை பட்டை தீட்டி ஒரு சுவாரஸ்ய கட்டத்துக்கு கொண்டு வந்திருப்பது ரசிக்கும்படி உள்ளது. க்ரைம் போலீஸ் அதிகாரிகளுக்கு சில புதிய
ஐடியாக்களையும் சிந்திக்க தூண்டுகோலாக இது இருக்கும்.

சென்னை ஃ பைல்ஸ்
முதல் பக்கம் – ஒரு முறை ரசிக்கலாம்.

By

ஜெயச்சந்திரன் கே www.trendingcinemasnow.com

Related posts

Stunt Director ‘Anl’ Arasu turns Director and Producer

Jai Chandran

HariAndHarish and entire team wishes Samantha

Jai Chandran

Raame Aandalum Raavane Aandalum Trailer Out Now!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend