Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சரண்டர் (பட விமர்சனம்)

படம்: சரண்டர்

நடிப்பு:; தர்ஷன், லால் சுஜித், முனிஷ்காந்த், பாடினி குமார்,  அரரோல் டி சங்கர், சுந்தரேஸ்வரன், கௌஷிக்

தயாரிப்பு: வி ஆர் வி குமார்

இசை: விகாஸ் பாடிஷா

ஒளிப்பதிவு: மெய்யேந்திரன்

இயக்கம்: கௌதமன் கணபதி

பி ஆர் ஓ: சதீஷ் (s2 Media)

புதிதாக போலீஸ் கான்ஸ்டபிளாக சேர்கிறார் தர்ஷன். அதே காவல் நிலையத்தில் சீனியர் போலீஸ் லால் ரைட்டராக பணியாற்றுகிறார். இந்த நிலையில் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அதனால் விஐபிகள் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் தேர்தல் முடியும் வரை ஒப்படைக்கும்படி ஆணை வருகிறது. நடிகர் மன்சூரலிகான் தனது துப்பாக்கியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கிறார். அந்த துப்பாக்கி திடீரென்று காணாமல் போகிறது. அதேசமயம் ரவுடி கணகு (சுஜித்)  தேர்தலுக்காக தொகுதிக்கு அனுப்பிய ரூ 10 கோடி பணம் காணாமல் போனதால் அதை பதுக்கிய இன்ஸ்பெக்டரை தேடி அலைகிறான். லாலுக்கும் ரவுடி கணக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் அவமானப்படுத்தப்படுகிறார்.லால்.  அதைக் கண்டு தர்ஷன் ஆத்திரப்பட்டு ரவுடி மீது தாக்குதல் நடத்துகிறார். இப்படி இடியாப்ப சிக்கலில் செல்லும் கதையின் கிளைமாக்ஸ் விறுவிறுப்பை நோக்கி நகர்கிறது.

போலீஸ் ரவுடி கதை நிறைய வந்திருக்கிறது அதில் ஒரு குடும்ப செண்டிமெண்ட், தேர்தல் அரசியல் கலந்து வித்தியாசமான ஒரு படமாக வெளிவந்திருக்கிறது சரண்டர்.

காட்சிகள் மெல்ல மெல்ல தொடங்கினாலும் போகப்போக வேகம் எடுக்கிறது. குறிப்பாக சீனியர் போலீஸ் லால் தன்னிடம் சரண்டர் செய்யப்பட்ட மன்சூர் அலிகான் துப்பாக்கியை தொலைத்துவிட்டு அதை தேடுவதற்காக பதறுவதும், ஒரு கட்டத்தில் ரவுடியின் தம்பியிடம் முறைப்பு காட்டி பின்னர் ரவுடி மற்றும் அவனது தம்பியிடம் லால் அவமானப்படுவதும், அடி வாங்குவதும் அரங்கில் கோபத்தை அதிகரிக்க செய்கிறது.

சீனியர் போலீஸ் லால் துணையாக தர்ஷன் நிற்கத் தொடங்கியதும் அதிரடி காட்சிகள் ஆரம்பமாகின்றன. ரவுடியின் தம்பியை பழைய பஸ்ஸில் வைத்து தாறுமாறாக தாக்கி லால் பட்ட அவமானத்திற்கு பழி தீர்ப்பது ஆறுதலான விஷயம்.

கிளைமாக்சில் மீண்டும் ரவுடி சுஜித்திடம் லால் சிக்கிக்கொள்ள அவரை தனி ஆளாக மீட்க வரும் தர்ஷன் ஆக்சன் அதிரடியில் இறங்கி இருக்கிறார். முதல் படமே தர்ஷனுக்கு ஆக்சன் அதிரடியாக அமைந்திருப்பதும் அதற்கான ஸ்கிரிப்ட் வலுவாக அமைந்திருப்பதும் தர்ஷனின் நல்ல நேரத்தை காட்டுகிறது.

கிரைம், சஸ்பென்ஸ், திரில் என்று பரபரப்பாக செல்லும் ஸ்கிரிப்டில் முனிஷ்காந்த் ஒரு காமெடி அரங்கேற்றம் செய்திருப்பது கலகலப்பு.

பாடினி குமார்,  அரரோல் டி சங்கர், சுந்தரேஸ்வரன், கௌஷிக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்

வி ஆர் வி குமார் தயாரித்திருக்கிறார்.

விகாஸ் பாடிஷா  இசை,  மெய்யேந்திரன் கேமரா விறுவிறுப்புக்கு துணை நிற்கிறது.

இயக்குனர் அறி வழகனின் உதவியாளராக பணிபுரிந்த கௌதமன் கணபதி  சரண்டர் படத்தை ஒன்றுக்கு பலமுறை ஸ்கிரிப்ட் வலுப்படுத்தி இருப்பது காட்சிகளில் தெரிகிறது.

சரண்டர் – ஆக்சன் பிரியர்களை சரண்டராக்கும்.

By jayachandran k

www.trendingcinemasnow.com

 

 

Related posts

ராஜபுத்திரன் (பட விமர்சனம்)

Jai Chandran

ஐ கான்ட் ப்ரித் வீடியோ

Jai Chandran

நடிகை கங்கனா வீட்டில் துப்பாக்கி சூடு.. மனாலியில் பரபரப்பு…

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend