Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

4 தேசிய விருதுகளை தட்டி வந்த தமிழ் படங்கள்: சிறந்த நடிகர், நடிகை யார், யார்?

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த  படங்கள் மற்றும் நடிகர், நடிகை தொழில் நுட்ப கலைஞர்களை  தேர்வு  செய்து மத்திய அரசு திரைப்பட விருதுகள் வழங்கி வருகின்றன.
71-வது ஆண்டு தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை சார்பில் நேற்று ( ஆகஸ்ட் 1ம் தேதி 2025) அறிவிக்கப்பட்டன. மொத்தம் 40 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவை கடந்த 2023ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் வென்றார். (ஜவான் – இந்தி),
அதேபோல் விக்ராந்த் மாஸ்ஸி சிறந்த நடிகர் தேர்வு செய்யப்பட்டார். (படம்12-வது பெயில் ). சிறந்த  நடிகரான ஷாருக்கான் நடித்த ஜவான் இந்தி படத்தை தமிழ் பட இயக்குநர் அட்லீ இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி  வென்றார். ( படம்: மிஸஸ் சாட்டர்ஜி Vs நார்வே

சிறந்த துணை நடிகர்கள் எம்.எஸ். பாஸ்கர் ( தமிழ் படம் :பார்க்கிங் , விஜயராகவன் (பூக்காலம் – மலையாள படம்), சிறந்த துணை நடிகை ஊர்வசி (உள்ளொழுக்கு – மலையாள படம்), ஜான்சி போடிவாலா (வாஸ் குஜராத்தி படம்.

சிறந்த இயக்குநர் சுதிப்தோ சென்னுக்கு ( இந்தி படம் தி கேரளா ஸ்டோரி)

சிறந்த இசை அமைப்பாளர் ஜி.​வி.பிர​காஷ் குமார் ( தமிழ் படம்  பாடல்கள் வாத்தி, ஹர்​ஷ்வர்​தன் (இந்தி பட அனிமல் பின்​ணணி இசை)

சிறந்த பின்​னணி பாடகர்  பிவிஎன்​எஸ்.ரோஹி(பிரேமிஸ்​துன்​னா – பேபி – தெலுங்கு படம்), சிறந்த பின்​னணி
பாடகி விருது ஷில்பா ராவ் (ஜவான் – சலி​யா – இந்தி ​படம்).

சிறந்த பாடல் விருது கசர்லா ஷியாம் (பல​கம் – ஊரு பல்​லேட்​டுரு – தெலுங்கு படம்), சிறந்த நடம் வைபவி மெர்​சன்ட் (ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி – திந்​தோரா பஜே ரே – இந்தி படம்), சிறந்த சண்டை பயிற்​சி நந்து பிருத்வி (ஹனு​மன் – தெலுங்கு ​படம்), சிறந்த ஒளிப்​ப​திவு பிர​சாந்து மகோ​பாத்ரா (தி கேரளா ஸ்டோரி), சிறந்த கதை வசனம் ராம் குமார் பால​கிருஷ்ணன் (பார்க்​கிங் – தமிழ் படம்), சாய் ராஜேஷ் நீலம் (பேபி – தெலுங்கு படம்), தீபக் கின்​கி​ரானி (சிர்ப் ஏக் பந்தா காபிஹே – இந்தி படம்).

சவுண்ட் டிசைன் சச்​சின் சுதாகரன், ஹரிஹரன் முரளிதரன் (அனிமல் – இந்தி படம்),

சிறந்த எடிட்​டிங்  மிதுன் முரளி (பூக்​காலம் – மலை​யாள தlபடம்)

சிறந்த தமிழ் படம் பார்க்​கிங் திரைப்​படம். இந்த பிரி​வில் படத்​தின் தயாரிப்பு நிறு​வ​மான சோல்​சர்ஸ் பேக்​டரி, பேசன் ஸ்டூடியோ, இயக்​குநர் ராம்​கு​மார் பால​கிருஷ்ணனுக்கு விருது அறிவிக்​கப்​பட்டிருக்கிறது.

ஆவண படப் பிரி​வில் சிறந்த ஒளிப்​ப​திவு சரவண​முத்​து, சவுந்​திர​பாண்​டி, மீனாட்சி சோமன் (லிட்​டில் விங்ஸ் – தமிழ் குறும் படம்)

பார்க்கிங் தமிழ் படம், சிறந்த படம், கதை வசனம், துணை நடிகர் ஆகிய பிரிவு​களில் 3 விருதுகளை வென்​றுள்​ளது.

பார்க்​கிங் படத்​துக்கு துணை நடிகர் விருது பெற்ற  நடிகர் எம்​.எஸ்​.​பாஸ்​கர் கூறியது:

இந்த விருது கிடைத்​த​தில் மகிழ்ச்​சி. தேர்வு குழு​வினருக்​கும், அரு​மை​யான கதையை​யும் அதற்கு சிறந்த திரைக்​கதையை​யும் அமைத்த இயக்​குநர் ராம்​கு​மார் பால​கிருஷ்ணனுக்​கும் நன்​றி. அடுத்து படம் இயக்க இருக்​கிற உதவி இயக்​குநர்​கள், இது​போன்ற வித்​தி​யாச​மான கதைகளைத்​ தேர்​வு செய்​து இயக்​க வேண்​டும்​ என் வாழ்த்​துகிறேன்​.

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ‘வாத்தி’ படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமார் பெறுகிறார்.  ஏற்கெனவே சுதா கொங்கரா இயக்கதில் சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ படத்திற்காக அவர் தேசிய விருது வென்றுள்ளார்.

2வது முறையாக தேசிய விருது வென்ற ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியது: ‘

வாத்தி’ படத்திற்காக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சி. தேர்வுக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘பொல்லாதவன்’, ‘அசுரன்’, ‘வாத்தி’, இட்லி கடை’ படங்களுக்கு இசையமைக்க என்னை தேர்வு செய்த சகோதரர் தனுஷுக்கு நன்றி. இயக்குனர் வெங்கி ஆட்லுரி மற்றும் தயாரிப்பாளர் நாக வம்சி, திரிவிக்ரம் ஆகியோர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. என் குடும்பம், எனது இசை குழுவினர், பாடலாசிரியர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நண்பர்கள் மற்றும் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.இவ்வாறு ஜி வி பிரகாஷ் குமார் கூறினார்.

 

 

Related posts

சார்பட்டா பரம்பரை (பட விமர்சனம்)

Jai Chandran

நடிகர் கிரீட்டி நடிக்கும் முதல் படம் ‘ஜுனியர்’

Jai Chandran

AnnaattheTrailer is releasing Tomorrow @ 6 PM!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend