படம்: பர்த் மார்க்
நடிப்பு: சபீர் கல்லரக்கல், மிர்ணா, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி,
பிஆர்.வரலட்சுமி
தயாரிப்பு: ஶ்ரீ ராம் சிவராமன், விக்ரம் ஶ்ரீதரன்
இசை: விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு: உதய் தங்கவேல்
இயக்கம்: விக்ரம் ஶ்ரீதரன்
பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா (D One)
கர்ப்பிணி மனைவி மிர்ணாவை அழைத்துக் கொண்டு இயற்கை பிரசவத்துக்காக கேரளா செல்கிறார் சபீர். இவர் போர் முனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் மன குழப்பத்தில் இருக்கிறார். இதனால் அடிக்கடி அவருக்கு பல்வேறு சிந்தனைகள் வந்து செல்கிறது. இயற்கை பிரசவத்திற்காக செல்லும் இடத்தில் உள்ள காவலாளிடம் சபீருக்கு வாய் தகராறு ஏற்படு கிறது. ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறுகிறது. இதற்கிடையில் மிர்ணா மீது பாசம் காட்டும் சபீர் அவரது வயிற்றில் வளர்வது தன்னுடைய குழந்தை இல்லை என்று குண்டு தூக்கி போடுகிறார். அதைக்கேட்டு மிர்ணா அதிர்ச்சி அடைகிறார் . இந்த குழந்தைக்கு பதிலாக நாம் வேறு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சபீர் கூற பயந்து நடுங்குகிறார் மிர்ணா. எங்கே தன் குழந்தையை கொன்று விடுவாரோ என்ற பயத்தில் சபீரை குடிசையில் வைத்து பூட்டிவிட்டு தீ மூட்டிவிட்டு தப்பி செல்கிறார். அங்கிருந்து தப்பும் சபீர் மிர்ணாவை துரத்துகிறார். மிர்ணாவுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அதே நேரத்தில் அவரை சபீர் தாவி பிடிக்கிறார். அடுத்து நடந்தது என்ன? சபீர் மிர்ணாவை என்ன செய்தார், மிர்ணாவுக்கு குழந்தை பிறந்ததா? அதை சபீர் என்ன செய்கிறார் என்ற பல கேள்விகளுக்கு பரத் மார்க் கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
இந்த படத்தை பார்ப்பதற்குமுன் ஏதாவது ஒரு விமர்சனத்தை படித்து விட்டு சென்றால் படத்தின் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும் . இல்லாவிட்டால் கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாகத்தான் படத்தை பார்க்க வேண்டி இருக்கும்.
மனைவி மிர்ணாவை. இயற்கை பிரசவத்துக்காக அழைத்து வரும் சபீர் அவர் மீது பாசம் காட்டும் நிலையில் திடீரென்று அவர் அவ்வப்போது மிர்ணா.வயிற்றில் இருக்கும் குழந்தையை வெறுப் பாக பார்ப்பது ஏன் என்று புரியாமல் இருக்கும் நிலையில் அதற்கெல்லாம் காரணம் அவர் போர் முனையில் இருந்து வீடு திரும்பியதால் போரின் பாதிப்பு அவரை விட்டு நீங்காத நிலையில் இப்படி ஒரு டிசார்டரில் அவர் சிக்கி தவிக்கிறார் என்ற உள் அர்த்தம் இருப்பதாக இயக்குனர் தெளிவு படுத்தினார். அதையும் மனதில் வைத்து இந்தப் படத்தை பார்த்தால் தான் டென்ஷன் இல்லாமல் காட்சிகளை பின்தொடர முடியும்.
கர்ப்பிணியாக வரும் மிர்ணாவை தொடக்கம் முதல் இறுதிக் காட்சி வரை கர்ப்பிணியாகவே வாழ்ந்து முடிக்கிறார். இயற்கை பிரசவம் நடப்பதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் இயற்கை வைத்தி யங்கள் ஒரு பக்கம் இது நல்லது தானே என்று தோன்றினாலும் மிர்ணா படும் கஷ்டங்களை பார்க்கும்போது எந்த நேரத்திலும் அவருக்கு குழந்தை பிறந்து விடும் என்று ஒரு பதற்றம் மனதுக்குள் ஊசலாடிக் கொண்டே இருக்கிறது. இதை கர்ப்பிணி பெண்கள் பார்த்தால், சொல்ல முடியாது அவர்களுக்கு தியேட்டரிலேயே பிரசவம்கூட ஆகிவிடலாம் அந்த அளவுக்கு ஒரு கர்ப்பிணி பெண்ணின் வலியையும் வேதனையையும் தத்ரூபமாக கண்முன் நிகழ்த்தி காட்டியி ருக்கிறார் மிர்ணா.
ஒரு சில காட்சிகள் கதைக்கு தொடர்பு இல்லாதது போல் திடீர் திடீர் என்று வந்து செல்வது குழப்பத்தை அதிகரிக்கிறது..
காவலாளிடம் சபீர் சண்டை போடும் காட்சிகளில் எந்த நேரத்தில் காவலாளிடம் சபீர் அடி வாங்குவாரோ என்ற பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் அது நடந்து முடிகிறது. காவலாளிடம் அடி வாங்கிய சபீர் சும்மா இருப்பாரா அந்த காவலாளியை அவர் என்ன செய்கிறார் என்பது ஒரு சஸ்பென்ஸ்.
மேலும் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பிஆர்.வரலட்சுமி நடித்திருக்கின்றனர்.
கதை எழுதி தயாரித்திருக்கின் றனர் ஶ்ரீ ராம் சிவராமன் விக்ரம் ஶ்ரீதரன்.
மாறுபட்ட இசையை விஷால் சந்திரசேகர் அமைத்திருக்கிறார்.
உதய் தங்கவேல் ஒளிப்பதிவு கண்ணாடி போல் பளபளகிறது
விக்ரம் ஶ்ரீதரன் இயக்கம் கொஞ்சம் கடினமான புரிதலை ஏற்படுத்துகிறது. படத்தில் தொடக்கம் முதல் கடைசி வரை ரிலாக்ஸ் என்பதற்கு இடம் எதுவும் இல்லாமல் நேர்கோட்டில் கதையை இயக்கிச் சென்று இருக்கிறார் டைரக்டர்.
பர்த் மார்க் – டென்ஷன் பிரசவம்.