படம்: நினைவெல்லாம் நீயடா
நடிப்பு: பிரஜன், யுவலட்சுமி , சினாமிகா,. முத்துராமன், மனோபாலா, யாசர், அபி நட்சத்திரா, ஆர் வி உத்யகுமார், பி எல் தேனப்பன்
தயாரிப்பு: ராயல் பாபு
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: ராஜா பட்டாச்சார்ஜி
இயக்கம்: ஆதிராஜன்
பி ஆர் ஒ: A ஜான்
பள்ளியில் புதிதாக வந்து சேரும் யுவலட்சுமி மீது காதல் கொள்ளும் இள வயது பிரஜன் தன் காதலை அவரிடம் சொல்லத் தயங்கி பள்ளி முடியும் தருவாயில் காதல் கடிதம் தருகிறார். இந்நிலையில் யுவலட்சுமி தந்தையின் உடல் நிலை பாதித்ததால் அவரைக் காண வெளிநாடு புறப்பட்டு செல்கிறார். சென்றவர் மீண்டும் திரும்பாத நிலையில் பிரஜனை தன் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தார் வற்புறுத்துகின்றனர். அதை ஏற்று அவரை திருமணம் செய்கிறார். ஆனால் இருவரும் மனதளவில் ஒற்றுமையாக இல்லாமல் சண்டை சச்சரவு என்று இருக்கின்றனர். பழைய காதலை எண்ணி பிரஜன் குடிகாரனாக மாறுகிறார். அதை பார்த்து அவரது மனைவி மனம் பேதலித்து பைத்தியம் ஆகிறார். இந்த நிலையில் வெளிநாடு சென்ற யுவலட்சுமி மீண்டும் இந்தியா திரும்புகிறார். அவருக்கு திருமணம் ஆகி இருக்கும் என்று எல்லோரும் கூறிய நிலையில் அவர் பிரஜனுக்காக திருமணம் செய்து கொள்ளாமல் காத்திருக் கிறார். அதைக் கண்டு பிரஜன் மனம் வாடுகிறார். எப்படியாவது பிரஜனை திருமணம் செய்துக் கொள்ள யுவலட்சுமி எண்ணு கிறார் ஆனால் இறுதியில் எதிர்பார்க்காத திருப்பம் நடக்கிறது. பிரஜனை பார்க்க வந்தவர் யுவலட்சுமி இல்லை என்று தெரிய வர அதன் பிறகு நடப்பது என்ன என்பதை நொடிக்கு நொடி திருப்பங்களுடன் நினை வெல்லாம் நீயடா படம் விளக்குகிறது.
ஆதிராஜன் இயக்கியிருக்கும் நினைவெல்லாம் நீயடா ஒரு பசுமையான காதல் படம் என்பதுடன் இசைஞானி இளையராஜாவின் தேன் சொட்டும் இசையில் மலர்ந்திருக்கும் புது காதல் ரோஜா.
பிரஜன் காதல் சோகத்தில் கவலையுடன் பழைய நினைவுகளை ஆசை போட அவரது பள்ளிப் பருவ காதல் காட்சிகள் தொடங்கு கின்றன.
தேவதை போல் வருகிறார் யுவலட்சுமி அவரைக் கண்டதும் யாரும் காதல் கொள்வார்கள். அப்படித்தான் அவரது சக வகுப்பு தோழனும் காதல் கொள்கிறான். 90ஸ் ஸ்கூல் கிட்ஸ் போல் சுவலட்சுமிடம் காதலை சொல்ல தயங்குவதும் ஆனால் அவரை விட்டு பிரியாமல் நட்புடன் இருப்பதும் இளமை துடிப்பான நகர்வுகள்.
எப்படியாவது யுவலட்சுமியிடம் காதலை சொல்ல வேண்டும் என்று எண்ணும் பிரஜன் அவரிடம் காதல் கடிதத்தை கொடுத்துவிட்டு என்ன சொல்வாரோ என்று காத்திருக்கும் காட்சிகள் படபடப்பு.
யாருக்கும் சொல்லாமல் யுவ லட்சுமி அமெரிக்க சென்றதை அறிந்து பிரஜன் மனம் உடைந்து காதல் தோல்வியில் கன்னத்தில் தாடியும், கையில் புட்டியுமாக மாறுகிறார்.
குடும்பத்தார் வற்புறுத்தலின் பேரில் மனிஷா யாதவை பிரஜன் திருமணம் செய்து கொள்வது கண்மூடி கண் திறப்பதற்குள் மருத்துவமனையில் பைத்தியமாக மனிஷா இருப்பது, குடிகாரனாக பிரஜன் மாறுவதெல்லாம் ஏதோ ஒரு பிளாஷ்பேக்கை உள்ளடக்கி இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
அமெரிக்கா சென்ற யுவலட்சுமி வளர்ந்து ஆளாகி சினாமிகாவாக திரும்பியதும் தன் காதலன் பிரஜனை கேட்டு தோழிகளிடம் பொய்க் கோபம் கொள்வதும் பிரஜனை கண்டவுடன் அவரை மணந்து கொள்ள எண்ணுவதும் நிஜ காதலின் பிரதிபலிப்பு. ஆனால் ஒரு கட்டத்தில் தான் பிரஜனின் காதலி யுவலட்சுமி அல்ல என்று பெரிய குண்டை தூக்கிப் போடும்போது அப்படி யென்றால் யுவலட்சுமிக்கு என்னவானது என்று அறிய மனம் துடிக்கிறது.
படத்தின முதல் பாதி இந்தக்கால அலைகள் ஓய்வதில்லை ஆக காதல் மணம் வீசுகிறது.
பிரஜனின் பள்ளி தோழராக வரும் ரெடின் கிங்ஸ்லி அவ்வப்போது காமெடி பட்டாசுகள் வெடிக்கிறார் .
ரோகித் l, மனோபாலா, மதுமிதா ஆர்.வி. உதயகுமார், பி எல் தேனப்பன், அபி நட்சத்திரா முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்து காட்சிகளுக்கு மெருகூட்டுகின் றனர்.
80, 90 காலகட்டங்களில் இளைய ராஜாவின் இசை பெரு வெள்ளம் பெருகி ஓடியது அதை மீண்டும் மடை மாற்றி நினைவெல்லாம் நீயடா படத்தில் கொண்டு வந்து காதுகளில் பாய்ச்சி இருக்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.
ராஜாவின் பாடல்கள் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் தேனில் ..பாகுவை சேர்த்தது போல் இனிமை கூடிக் கொண்டே செல்கிறது. மீண்டும் ஒரு முறை பாடல்கள் கேட்க தூண்டுகிறது.
ராயல் பாபு படத்தை தயாரித்திருக்கிறார்.
ராஜா பட்டாச்சார்ஜி காதல் மென்மை குறையாமல் பதிவு செய்துள்ளார்.
நினைவெல்லாம் நீயடா – இசை மழையில் ஒரு காதல் கவியரங்கம்.