படம்: பூம் பூம் காளை
நடிப்பு:கெவின், சாரா தேவா, ஆர்.சுந்தராஜன், அப்புக்குட்டி, காதல் அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ
தயாரிப்பு: தன்ராஜ் கென்னடி
வெளியீடு: ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிக்சர்ஸ்
இசை: பி ஆர்.ஸ்ரீநாத்
ஒளிப்பதிவு: கே.பி.வேல் முருகன்
இயக்கம்:ஆர்.டி.குஷால்குமார்
ஷீரோ கெவினுக்கு குடும்பத் தினர் பெண் பார்த்து திரும ணம் செய்துவைக்க புதுஜோடி ஹனிமூனுக்கு ஊட்டிக்கு செல்கின்றது. ஓட்டலில் அறை எடுத்து தங்குகின்றனர். ஆசை யுடன் மனைவியை நெருங்கு கிறார் கெவின். ஆனால் மனைவி சாரா வாழ்கை பற்றி தத்துவம் பேசுகிறார். முதலிரவு நடப்பதற்கு முன் ஒருவர் பற்றி ஒருவர் பேசி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிறார். விடிய விடிய சாரா தன் எண்ணங்கள், பள்ளி அனுபவங்கள் பேசுகிறார். இப்படியே நாட்கள் கடக்கி றது. விரகதாபத்தில் கெவின் தவிக்கிறார். அவரது நிலையை தெரிந்துக் கொள்ளும் அப்புக் குட்டி மனைவியை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்று கெவினுக்கு ஐடியா தருகிறார். அதன்படி குடித்து விட்டு அறைக்கு வருகிறார் கெவின். சாராவை வலுக்கட் டாயமாக அடையச் சென்று அது காமெடியில் முடிய மனைவியிடம் பல்ப்பு வாங்குகிறார் கெவின். ஊட்டிக்கு வரும் சுந்தர்ராஜன் சச்சு ஜோடி கெவினுக்கு அட்வைஸ் செய்கின்றனர். இதற்கிடையில் கெவின் தன்னை பலவந்தபடுத்த முயன்றதால் அவரது இச்சைக்கு சம்மதிக்கிறார் சாரா. ஆனால் தன்மானம் கெவினை தடுக்க தேனிலவு முடியாமலே புதுஜோடி ஊருக்கு புறப்பட தயாராகி றது. அடுத்து நடக்கும் திருப்பம் என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கி றது.
நடிகை அனுராதாவின் மகன் கெவின் ஹீரோவாக அறிமுக மாகி இருக்கும் படம். தொடக்க காட்சியிலேயே தனது நடன திறமையை வெளிப்படுத்துகிறார். அடுத்த காட்சியிலேயே கதை தொடங்கிவிடுகிறது. சாரா கழுத்தில் தாலியை கட்டி தேனிலவுக்கு புறப்படுகிறார். காரில் பயணம் செய்யும்போது தாராவிடம் சிலுமிசம் செய்ய எண்ணும் கெவின் அவரை கொஞ்ச முயல்வதும் அதை கவனிக்கும் டிரைவர் கிரேன் மனோகர் கடுப்பாகி காரை நிறுத்திவிட்டு கெவினை கீழே இறக்கி கண்டிக்கிறார். ஊட்டி யில் ஓட்டலுக்கு வந்தவுடன் தேனிலவு ஜோடி கிளுகிளுப்பு தொடங்கிவிடும் என்று எதிர்பார்த்தால் சாராவோ வாழ்க்கை தத்துவம் பேசி கவினை கடுப்பேற்றுகிறார். சாராவின் தத்துவங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் கெவின் தன்னு டைய ஆசையை பல வழி களில் வெளிப்படுத்துவதும் ஆனால் சாராவிடம் எந்த பாச்சாவும் பலிக்கவில்லை.
யோகா செய்கிறேன் என்று நெஞ்சை நிமிர்த்தி கவர்ச்சி கிக் ஏற்றுகிறார் தாரா. தன்னிடன் கெவின் நெருங்கும் போதெல் லாம் அவரிடம் வாழ்க்கை, வயதான பின்னும் காதலிக்க வேண்டும் என்று மறுபடியும் பேசி கடுப்பேற்றுகிறார். கெவின் அப்பாவித்தனமாக பொருத்தமான நடிப்பை வெளியிட்டாலும் பாடி லேங்க்வேஜ் மிஸ்ஸிங்.
அப்புக்குட்டி ஓட்டல் தோட்டக்காராராக வருகிறார். கெவினுக்கு முதலிரவே நடக் காத நிலையில் தனக்கு 3 மனைவிகளுடன் முதலிரவு முடிந்துவிட்டதாக சொல்லி யும் அவ்வப்போது மனைவி யிடம் கொஞ்சியும், வீட்டில் இப்படி கசமுசா நடந்தது, அப்படி கசமுசா நடந்தது என்றும் கெவினை உசுப் பேற்றி வெறுப்பேற்றுவது மாக மன்மத குஞ்சாக நடித்தி ருக்கிறார். அப்புக்குட்டி தன்னு டைய காதலியை தள்ளிக் கொண்டுபோய் கட்டிக் கொண்டார் என்று புலம்பும் காதல் அருண் ஊசிப்போன பலகாரங்களை எண்ணையில் பொறித்து அதை அப்புக் குட்டிக்கு கொடுத்து வஞ்சம் தீர்க்க பார்ப்பது தமாஷ்.
ஆர்.சுந்தராஜன், சச்சு ஜோடி சொல்லும் அட்வைஸ்கள் காமத்தில் தள்ளாடும் இளவட் டங்களுக்கு நல்ல அறிவுரை.
ஆர்.டி.குஷால் குமார் என்று பாம்பே ஸ்டைலில் இயக்கு னர் பெயர் இருந்தாலும் அவர் நம்மூர்க்காரர்தான். செந்தில் நாதன் போன்ற இயக்குனர்க ளிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பூம் பூம் காளை என படத்துக்கு சரியாக டைட்டில் வைத்திருக்கிறார். மனைவி சொல்வதற்கெல் லாம் தலையாட்டும் கணவரின் கதையாக இருந் தாலும் அதில் உள்ள சுவாரஸ் யத்தை சுவை குறையாமல் சொல்லி இருக்கிறார். இளவட்ட தம்பதிகள் மனஸ்தாபத்தால் விவாகரத்து செய்வது அடிக்கடி நடக்கிறது அதுபோன்ற ஜோடிகளுக்கும், காம கற்பனையில் மிதந்துக் கொண்டிருக்கும் இளவட்டங் களுக்கும் இப்படம் ஒரு நல்ல அனுபவத்தை தரும். முதலிரவு கதையை விரசமில் லாமல் சொல்லி இருக்கும் இயக்குனரின் கண்ணியம் பாராட்டுக்குரியது.
கே.பி.வேல்முருகன் ஒளிப் பதிவு தெளிவு. இசையும் சோடை போகவில்லை.
பூம் பூம் காளை-கே. பாக்யராஜ் ஸ்டைலில் இளம் தம்பதியின் முதலிரவு ஏக்க கதை.