Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் போடியில் இன்று வேட்புமனு தாக்கல்..

அதிமுக. பாஜ, பா ம க கூட்டணி அமைத்து 2021ம் ஆண்டு  தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன. தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் முடிந்தன,  ஏற்கனவே இக்கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டது.

அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 20 தொகுதிகளும், பா ம கவுக்கு 23 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. அந்த தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் அதிமுக போட்டியிடும் தொகுதியில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. போடிநாயகனூரில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஒ  பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் இன்று போடிநாயகனூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக அங்கிருந்த ஜல்லிகட்டு காளைக்கு மாலை அணிவித்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Related posts

எஸ் .ஏ .சந்திரசேகர் இயக்கும் ‘நான் கடவுள் இல்லை’

Jai Chandran

பிரபல இசைப் பாடகர் டோனி கக்கார் ஆல்பத்தில் ஹன்சிகா நடனம்

Jai Chandran

IrudhiPakkam From Dec17; Win free tickets

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend