Trending Cinemas Now
Uncategorized சினிமா செய்திகள் விமர்சனம்

சாவீ (பட விமர்சனம்)

படம்: சாவீ

நடிப்பு: உதயா தீபா, ஆதேஷ் பாலா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே சேஷாத்திரி

தயாரிப்பு:  ஆண்டன்  அஜித் புரடக்சன்

இசை: சரண் ராகவன், வி ஜே ரகுராம்

ஒளிப்பதிவு: பூபதி வெங்கடாசலம்

இயக்கம்: ஆண்டன் அஜித்

பிஆர்ஓ: ஆர்.மணி மதன்

கதை: உதய தீபாவை அவரது மாமா உடலுக்கு காவல் வைத்து விட்டு செல்கிறார்கள். திடீரென்று அந்த உடல் காணாமல் போகிறது. இதுபற்றி போலீசில் புகார் செய்யப்படுகிறது. போலீஸ் விசாரணை தொடங்கியதும் கதை வெவ்வேறு கோணங்களில் பயணிக்கிறது. உறவினர்கள், கடன் கொடுத்தவர்கள், கடன் வாங்கியவர்கள், குடும்பத்தினர் என எல்லோரையும் போலீஸ் துருவி துருவி விசாரிக்கிறது. உடலை கடத்திச் சென்றவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடிந்ததா என்பது தான் கிளைமாக்ஸ்.

டார்க் காமெடி ஸ்டைலில் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்  ஆண்டன் அஜித். டார்க் காமெடி படம் என்றாலே அதில் கதாநாயகனாக இருப்பது பிணம் என்பதுதான் கடந்த கால படங்களில் பார்க்கும்போது கணிக்க முடிந்தது. இந்த படத்திலும் பிணம்தான் பிரதான பாத்திரம்.
தனது மாமா இறந்துவிட அந்த உடலுக்கு பாதுகாப்பாக உதயா தீபா அமர்ந்திருக்க கண்விழித்து பார்க்கும்போது அங்கு உடலை காணாமல் உறவினர்கள் பதறுவதும், போலீஸ் வந்து துருவி துருவி விசாரிப்பதும் காட்சி களை சுவாரஸ்யமாக நகர்த்துகிறது.
பிணத்தை இவர்தான் கடத்தி இருக்கக்கூடும் என்று மனதுக்குள் கணிக்க முடிந்தாலும் இதை இவர் ஒருவரால் எப்படி செய்திருக்க முடியும் என்ற எண்ணம் அந்த சந்தேகத்தை மாற்றி விடுகிறது

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஆதேஷ் பாலாவும் கொஞ்சம் சஸ்பென்சுக்கு பயன்பட்டிருக்கிறார்.

மேலும் ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் கே சேஷாத்திரி நடித்திருக்கிறார்கள்.

பார்க் காமெடி படத்தில் திடீரென்று குபீர் சிரிப்பு வரும்.. இந்த படத்தில் அது உதட்டு புன்னகையோடு முடிந்து விடுகிறது.

சரண் ராகவன், வி ஜே ரகுராம் இசை அமைத்திருக்கிறார்கள்
பூபதி வெங்கடாசலம் கிடைத்த ஒளியை பயன்படுத்தி படமாக்கி இருக்கிறார்.

ஆண்டன் அஜித் படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். பெரிய அறிமுகம் இல்லாத முகங்களை வைத்துக்கொண்டு இந்த அளவுக்கு ஒரு டார்க் காமெடி படத்தை இயக்கியிருப்பது ஓகே ஆனால் திரைக்கதையில் இன்னும் சுவாரசியத்தை சேர்த்து காமெடிக்கு முக்கியத்துவம் தந்திருந்தால் கூடுதல் கவனம் பெற்றிருக்கும்.

சாவீ என்ற டைட்டிலுக்கு என்ன அர்த்தம் என்று இயக்குனரிடம் கேட்டால் “முதலில் சாவு வீடு என்று படத்துக்கு டைட்டில் இருந்தது அந்த டைட்டிலுடன் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி கிடைக்காததால் சாவு வீடு, சாவீ என்று சுருக்கப்பட்டு விட்டது” என சோகமாக கூறுகிறார்.

சாவீ- டார்க் காமெடி முயற்சி..

Two And A Half Star Rating Illustration Vector

 

Review by

K Jayachandhiran
www.trending cinemas now.com

 

Related posts

பிரைம் வீடியோ அறிவிப்பு: மாடர்ன் லவ் சென்னையின் அறிமுகம்

Jai Chandran

சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்துக்காக உருமாற்றம்: பிரபாஸ் ஓபன்டாக்

Jai Chandran

Pathu Thala Glimpse is Trending Now..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend