Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அந்த 7 நாட்கள் (பட விமர்சனம் (

படம்: அந்த 7 நாட்கள்

நடிப்பு: அஜிதேஜ், ஸ்ரீ ஸ்வேதா, கே பாக்யராஜ், நமோ நாராயாணா

தயாரிப்பு: முரளி, கபிர்தாஸ்

இசை: சச்சின் சுந்தர்

ஒளிப்பதிவு: கோபிநாத் துரை

இயக்கம்: எம் சுந்தர்

பிஆர் ஓ: சுரேஷ் சந்திரா (D’One), அப்துல் ஏ நாசர்

வானியல் துறை படிப்பவர் ஆதித்யா (அஜிதேஜ்). இவர் ஒரு முறை 300 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சூரிய கிரகணத்தை டெலஸ்கோப்பில் பார்க்கிறார். அப்போது இவருக்கு ஒரு அபூர்வ சக்தி கிடைக்கிறது. யாருடைய கண்களையாவது பார்த்தால் அவர்கள் இ
இறக்கும் நேரம் அவருக்கு தெரிந்து விடுகிறது. இதற்கிடையில் இளம் பெண் நிலா (ஸ்ரீ ஸ்வேதா) மீது ஆதித்யாவுக்கு காதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் நிலாவின் கண்களை பார்க்கும் அவருக்கு நிலா இறந்து விடுவார் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அந்த இறப்பிலிருந்து காதலியை காப்பாற்ற ஆதித்யா முயற்சிக்கிறார் அதன் முடிவு என்ன என்பது பரபரப்பாக அமைகிறது.

இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த எம் சுந்தர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பாக்யராஜ் உதவியாளராக இருந்தாலும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ப படத்தை இயக்கியிருக்கிறார். திரைக்கதை மன்னன் பாக்யராஜ் எப்படி தனது படங்களில் காட்சியில் எதிர்பார்க்ககாத ட்விஸ்ட் வைப்பாரோ அதுபோல் திரைக்கதையை திருப்பங்களுடன் அமைத்திருக்கிறார் சுந்தர்.

காதல் ஜோடியாக நடித்திருக்கும் அஜிதேஜ், ஸ்ரீ ஸ்வேதா தொடக்க காட்சிகளில் காதல் விளையாட்டு விளையாடி காட்சிகளை ஜாலியாக நகர்த்துகின்றனர்.

காதல் ஜோடிகளின் விவகாரம் வீட்டிற்கு தெரிந்து அவர்கள் இவர்களை துரத்த தொடங்கியதும் ஊரை விட்டு ஓடிச் சென்று கொடைக்கானலில் தங்குவதும், அங்கு இவர்களுக்குள் உடல் அளவில் ஏற்படும் வெறி ஆட்டமும் எதிர்பார்க்காத தருணங்களை தருகிறது.

கதாநாயகி ஸ்ரீ ஸ்வேதா வெறி நாய் போல் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது பதட்டத்தை அதிகரிக்கிறது. அவருடன் சேர்ந்து அஜிதேஜ் வெறி நாய்போல் மாறுவது கூடுதல் அதிர்ச்சி. இருவரும் நடிப்பும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பது போல் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
இதற்கு மேல் இந்த கதையை சொன்னால் சுவாரஸ்யம் குறைந்து விடும் .
சூரிய கிரகணத்தை கண்களில் பார்த்தால் பார்வை பறிபோய்விடும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இயக்குனர் அதைப் பார்த்தால் ஏதோ ஒரு சக்தி கிடைப்பது போல் சொல்லி இருப்பது மூடத்தனமான நம்ப முடியாத கருத்து . இந்த படத்தை பார்த்து யாராவது சூரிய கிரகணத்தை பார்த்து பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது. நேரடியாக சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது என்ற ஒரு எச்சரிக்கை வாசகத்தை திரையில் காட்டி இருக்கலாம்..

இயக்குனர் பாக்யராஜ் மந்திரியாக நடித்திருக்கிறார்.

முரளி, கபிர்தாஸ் படத்தை தயாரித்திருக்கிறார்கள். புதிய தயாரிப்பாளர்களாக களம் இறங்கி இருக்கும் இவர்கள் புதியவர்களுக்கு வாய்ப்பு தர முடிவு செய்திருப்பதாக கூறி இருப்பது இயக்குனர் கனவில் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம்.

சச்சின் சுந்தர் இசை மெலடி மெட்டுக்களை வாசித்திருக்கிறது.

கோபிநாத் துரை ஜிமிக்ஸ் வேலைகள் செய்து கவர்கிறார்.

Review By

K.Jayachandhiran

Trending cinemas now.com

Related posts

இதயத் துடிப்பை எகிறச் செய்யும் படம் பேட்டரி

Jai Chandran

K Bhagyaraj and Aishwarya Joining Hands after 30 years

Jai Chandran

ரியோ ராஜ், அம்மு அபிராமியின் “கரக்கி” ஆல்பம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend