Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சரீரம் (பட விமர்சனம்)

படம்: சரீரம்

நடிப்பு: தர்ஷன், சார்மி, ஜெ மனோஜ், பாய்ஸ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, மிலா, ஜிவி பெருமாள்

தயாரிப்பு: ஜிவி பெருமாள்

இசை: பாரதிராஜா

ஒளிப்பதிவு: கே டோர்னளா பாஸ்கர், பரணிகுமார்

இயக்கம் :ஜிவி பெருமாள்

பி ஆர் ஓ: ஆர்.மணி மதன்

,
ஒரே கல்லூரியில் படிக்கும் பிரியன் (தர்ஷன்) விஜயலட்சுமி (சார்மி) காதலிக்கின்றனர். விஜயலட்சுமி பணக்கார வீட்டுப் பெண். அவரது தந்தை தனது சொத்துக்கள் வேறு யாருக்கும் போய்விடக்கூடாது என்பதற்காக தன் மகளை மாமனுக்கே கட்டி வைக்க முடிவு செய்கிறார். ஆனால் விஜயலட்சுமி ஏற்க மறுத்து காதலன் பிரியனுடன் வெளியேறுகிறார். பிரியனை கொல்வதற்கு மாமன் திட்டமிடுகிறான். அதிலிருந்து தப்பிக்க பிரியனும் விஜயலட்சுமியும் விபரீத முடிவு எடுக்கிறார்கள். பிரியன் பிரியாவாகவும், விஜயலட்சுமி விஜயனாகவும் அறுவை சிகிச்சை செய்து மாறிவிடுகிறார்கள். அதன் பிறகு நடப்பது என்ன என்பது கிளைமாக்ஸ்

காதலுக்காக உயிரை கொடுக்கும் காதலர்களை பற்றி கதை வந்திருக்கிறது ஆனால் காதலுக்காக சேர்ந்து உயிர் வாழ வேண்டும் என்பதற்காக காதலன் பெண்ணாகவும், காதலி ஆணாகவும் மாறும் கதை இதில் தான் கேள்விப்படுகிறோம்.

புதுமுகம் தர்ஷன், புதுமுகம் சார்மி இருவரும் காதல் ஜோடிகளாக மாறிய பிறகு வில்லன் மாமனிடமிருந்து உயிர் தப்பிக்க இருவரும் ஊர் ஊராக ஓடி ஒளிவது, ஒரு கட்டத்தில் தங்களது உறுப்புகளை மாற்றிக்கொண்டு ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாற முடிவு செய்வது அதிர்ச்சி அளிக்கிறது.

தர்ஷனுக்கு பெண்வேடம் பொருந்திப்போவதுடன் அவர்களைப் போலவே நாணி கோணி பேசுவதெல்லாம் நன்றாகவே செய்திருக்கிறார்.
சார்மிக்கு மூக்கிற்கு கீழே மீசை வரைந்தாலும் அவர் ஒரு பெண் என்பதை மாற்றிக் காட்ட முடியவில்லை.

ஷகிலா டாக்டராக வருகிறார். ஏனோ தானோ என்றில்லால் பாத்திரத்தை உணர்ந்து பதட்டமில்லாத ஒரு டாக்டராக நடித்து ஸ்கோர் செய்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக ஜி வி
பெருமாள் நடித்திருப்பத்துடன் படத்தை தயாரித்து இயக்கியும் இருக்கிறார்.

காதல் ஜோடிகளுக்கு உதவும் திருநங்கைகள் கூட்டம் கிண்டல் கேலிக்கு ஆளாகாமல் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கோர்ட்டில் வாதாடும் திருநங்கை மிலன் கவனத்தை பெறுகிறார்..

மாறுபட்ட இந்த கதையை எப்படி முடிப்பார்களோ என்ற ஒரு திகில் இருந்தது ஆனால்  கிளைமாக்ஸை  ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இயக்குனர் இயக்கி இருப்பதும்,  நீதிபதி வாயிலாக வசனம் மூலம் தரும் விளக்கமும் பாராட்டுக்குரியது.

கதை வித்தியாசமான கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது ஆனால் இதே கதையை
ஷங்கரோ , மணிரத்தினம
மோ, ஏ ஆர் முருகதாசோ இயக்கியிருந்தால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார்கள் . இப்பட இயக்குனர் ஜிவி திருமாலை அந்தளவுக்கு கொண்டாடாவிட்டாலும் தோளில் தட்டிக் கொடுக்கலாம்.
இசையமைப்பாளர் பாரதிராஜா இன்னும் கவனம் செலுத்தி இசையமைத்திருந்தால் காட்சிகளை மேம்படுத்தி இருக்கலாம் . மேலோட்டமான இசையால் ஆழமான காட்சிகள்கூட சாதாரண காட்சி போல் கடந்து செல்கிறது.

கே டோர்னளா பாஸ்கர், பரணிகுமார் ஒளிப்பதிவு ஓகே.

சரீரம் – பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் பரபரப்பாக பேசப்பட்டிருக்கும்..

Review By

K.Jayachandhiran

Trending cinemas now.com

 

Related posts

Ameer Directorial “Iraivan Miga Periyavan” Movie Launch

Jai Chandran

பருத்தி வீரன் விவகாரம் இயக்குனர் அமீர் அறிக்கை

Jai Chandran

வில்லன் அவதாரம் எடுக்கிறாரா சத்யராஜ் ?

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend