Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஏ.ஆர்.ரஹமானின் மூப்பிலா தமிழ் தாயே பாடல் ஆல்பம் வெளியீடு

கலைஞர்களை மையமாகக் கொண்ட உலகளாவிய மேடையாக மாஜா தளம் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடலை வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, ஏற்பாடு செய்து, தயாரித்துள்ள, ‘மூப்பில்லா தமிழே தாயே’ படக் தமிழ் கலாச்சாரம் மற்றும் பல்வேறு துறைகளைச் சுற்றியுள்ள தமிழர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது.

‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடலை இங்கு கண்டுகளியுங்கள்

வரவிருக்கும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெள்ளிக்கிழமையன்று ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற நவீன யுக கீதத்தை வெளியிட்டார். மார்ச் 24 அன்று துபாய் எக்ஸ்போ இல் ரஹ்மானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், வெள்ளிக்கிழமை மாஜாவின் YouTube சேனலில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்ப ட்டது. நீங்கள் அதை இங்கே பார்க்கலாம்.

இந்த தனி ஆல்பம் பாடல் உலகம் முழுக்க பல தளங்களில் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது.

ஏ. ஆர். ரஹ்மானுடன் இணைந்து கனடா நாட்டு தொழில்முனைவோர் நோயல் கீர்த்திராஜ், சென் சச்சி மற்றும் பிரசனா பாலச்சந்திரன் ஆகிய மூவரின் சிந்தனையில் உருவானதுதான் மாஜா.

‘மூப்பில்லா தமிழே தாயே’
‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் பெயருக்கு ஏற்றாற்போல், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை எழுதிய இந்தப் பாடல், பழங்காலத் தமிழ்ப் பண்பாட்டையும், இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் கொண்டாடுகிறது.

ஊக்கம் மற்றும் தன்னம்பிக்கை தரும் பாடலாகக் கருதப்படும், ‘மூப்பில்லா தமிழே தாயே’ இளைய தலைமுறையினரைத் தங்கள் கலாச்சார வேர்களுடன் இணைக்கவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்துகிறது.

“இது அனைத்து தலைமுறையினரையும் உற்சாகப்படுத்தும் மற்றும் ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன், மேலும் தமிழ் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் பெருமையுடன் பார்க்க மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கீதத்தைப் பற்றி ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, ஏற்பாடு செய்து தயாரித்த இந்தப் பாடலில் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் பூவையார் ஆகியோர் ரஹ்மானுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இவர்களுடன் ரக்‌ஷிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா ஹரிகுமார் மற்றும் நகுல் அப்யங்கர் ஆகியோரின் கூடுதல் குரல்கள் தந்துள்ளனர்.

மாஜா தயாரித்து வெளியிட்டுள்ள இப்பாடலை, Studio MOCA வின் அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் வீடியோவை மாஜாவின் YouTube சேனலில் பார்த்து ரசிக்கலாம்.

Related posts

Arun Vijay- Hari project AV33 kickstarts in Rameswaram

Jai Chandran

“பரிவர்த்தனை ” படத்தின் அறிமுகமாகும் நட்சத்திரங்கள்

Jai Chandran

கார்த்திக் நடித்துள்ள ” தீ இவன் ” படத்தின் டப்பிங் துவங்கியது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend