தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. அனைத்துகட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. 20 சட்டமன்ற தொகுதிகள் பா ஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை டெல்லி மேலிடம் முதல் கட்டமாக 6 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
தாராபுரம் (தனி)- எல் முருகன்
அரவக்குறிச்சி – அண்ணாமலை
காரைக்குடி- எச். ராஜா
கோவை தெற்கு – வானதி சீனிவாசன்
ஆயிரம்விளக்கு- குஷ்பு
நாகர்கோவில்- காந்தி
இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பா ஜ வெளியிட்ட முதல் பட்டியலில் நடிகை குஷ்பு பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய அளவில் மக்கள் தொடர்பாளர் பொறுப்பில் இருந்tதார். கடந்த சில மாதங்களுக்கு முன் அக்கட்சியிலிருந்து விலகி பா ஜவில் இணைந்தார்.
next post