இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84). மூளையில் கட்டி ஏற்பட்டு அவதிப்பட்டார். அவர் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சென்ற 10-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
மூளையில் கட்டியை அகற்ற ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் அவர் கோமா நிலைக்கு சென்றார். தொடர்ந்து நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் இருப்பது கண்டறி யப்பட்டது.
நுரையீரல் தொற்றை சரிசெய்ய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இன்று காலையில் ராணுவ மருத்துவமனை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டது. நுரையீரல் தொற்று காரணமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செப்டிக் அதிர்ச்சி யில் உள்ளார். இந்த ஆபத்திலிருந்து அவர் மீண்டு வருவதற்கு மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில், வென்டி லேட்டர் உதவியுடனான சிகிச்சையில் இருக்கிறார்’ என கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.
அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் ஒருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கலில், ’முன்னாள் ஜனாதிபதி பிரணாப்பின் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் நிறைவு. இந்தியாவுக்கு மகத்தான சேவை செய்தார். தேசம் தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துள்ளது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குடிமக்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறி உள்ளார்.
பிரதமர் மோடி தனது இரங்கலில், ’பாரத ரத்னா பிரணாப் முகர்ஜியின் மறைவு நாட்டிற்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் அழியாத தடத்தை பதித்துள்ளார். அனுபவத்தில் அறிஞரான அவர், உயர்ந்த அரசியல்வாதி. அரசியல் எல்லையை தாண்டி சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் போற்றப் பட்டார்’ என கூறியிருக்கிறார்.
previous post