நடிகை ஆண்டிரியா திரைப் படங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிப்பு தவிர இசை அமைப்பாளர் பாடகியாக தன்னை நிரூபித்திருக்கிறார். தற்போது ’எழுந்து வா’ என்ற ஆண்ட்ரியா ஏடிகே என்ற டீமுடன் இணைந்து நம்பிக் கையூட்டும் பாடல் வெளியிட் டிருக்கிறார்.
நமக்குள்ளும் சக்திகள் இருக்கி றது, அதை நமக்கே சில பாடல் கள் உணர்த்தும். அப்படி யொரு பாடலாக அமைந் துள்ளது ‘எழுந்து வா’. இந்தப் பாடல் குறித்து ‘எழுந்து வா’ பாடல் உருவாகி இருக்கிறது. அதுபற்றி குழுவினரிடம் கேட்ட போது “சுதந்திரம் என்பது நமது மனதில் இருந்தே தொடங்குகிறது, நீங்கள் பார்க்கும் 4 சுவர்க ளுக்கு வெளியே அல்ல. உங்கள் ஒற்றுமை கைகொடுப் பதால் மனிதன் உருவாக்கிய எல்லைகள் மங்குகின்றன.
நீங்கள் சக்தி வாய்ந்தவர். உங்களால் ஒரு போரை நிறுத்த முடியும். நீங்கள் வாகை சூடலாம். நீங்கள் பறக்கலாம். நீங்கள் காரணமாக இருக்க லாம். நீங்கள் மாற்றமாக இருக்கலாம். எனவே, எழுங்கள். ஏனெனில் உங்கள் நேரம் வந்துவிட்டது. எழுங்கள்! ஏனெனில் உங்கள் குரல் கேட்க வேண்டும். எழுங்கள்! ஏனெனில் போதும் என்பது போதாது. எழுந்து வா” என்பது தான் இந்தப் பாடல் சொல்ல வரும் கருத்து என்றார்கள்.
கோரோனா அச்சுறுத்தலால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்தச் சமயத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர். ஆண்ட்ரியா மற்றும் ஆர்யன் தினேஷ் தங்களுடைய குரல்களின் மூலம் இருவகை கொண்ட மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் நேரத்தில், இந்த வீடியோவில் பாடல் குழுவினருடன் இணைந்து திவ்யா லீ நாயர் நடனமாடியுள்ளார்.
இப்பாடலை நஸீஃப் முஹம்மது இயக்கி உள்ளார்.
ப்ரித்வி சந்திரசேகர் தயாரித்தி ருக்கிறார்
டி. எஸ். எம். ஜி. ஓ மற்றும் பி. டி. ஓ. எஸ் புரொடக்ஷன்ஸ் வீடியோ தயாரித்துள்ளனர்.
ஆண்ட்ரியா மற்றும் ஏடிகே இசையமைத்துள்ளனர்.
ஆண்ட்ரியா, ஏடிகே மற்றும் பாபி பாத் பாடல் எழுதி உள்ளனர்.
ஆங்கில வரிகளை ஆண்ட்ரியா
ராப்: ஏடிகே எழுதி உள்ளனர்.
பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=BzihkXIUQ94&feature=youtu.be