Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பிரபாஸ் பிறந்தநாள் அக்டோபர்23ல் ’ராதே ஷ்யாம்’ புது அறிவிப்பு

நவராத்ரி தொடங்கிய சந்தோஷத்துடன் பாகுபலி பிரபாஸுக்கு வரும் அக்டோ பர் 23 அன்று பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட்ட தயாராக உள்ளனர். அவர் ஹீரோவாக நடித்து வரும் ராதே ஷ்யாம் படக் குழு  அன்றைய தினம் ’ராதே ஷ்யாம்’ படக் குழு சிறப்பு அறிவிப்பை வெளியிட உள்ளது.
சிறப்பு அறிவிப்பு: இந்த நவராத்திரியில் #BeatsOfRadheShyam பிரபாஸ் பிறந்தநாளான அக்டோபர் 23 அன்று வெளியாகிறது.
அகில இந்திய நட்சத்திரமான பிரபாஸ் வரும் அக்டோபர் 23 அன்று தனது பிறந்தநாளை கொண்டாட தயாராகிறார். அந்த தருணத்தில், தயாரிப்பாளர்கள் அக்டோபர் 23 அன்று #BeatsOfRadheShyam என்ற ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

பத்திரிகையாளர்கள் மத்தியில் தயாரிப்பாளர்கள் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளனர், அதில் “CAPTION AND LINK” என்று எழுதப்பட்ட ஒரு விஷேச அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
பிரம்மாண்ட படைப்பான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு காதல் காவியம். இப்படத்தில் அகில இந்திய நட்சத்திரமான பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பூஜா ஹெஜ்டேவின் பிறந்தநாளன்று அவரது ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.
இப்படத்தில் சச்சின் கடேகர், பாக்யஸ்ரீ, ப்ரியதர்ஷினி, முரளி ஷர்மா, சாஷா சேட்ரி மற்றும் குணால் ராய் கபூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
கரோனா அச்சுறுத்தால் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. சமீபமாக, இந்த மாத தொடக்கத்தில் படக்குழுவினர் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினர். இந்த செய்தியை நடிகர்களும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தனர். ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் ரொமாண்டிக் பீரியட் ட்ராமாவாக உருவாகும் இந்த பன்மொழி திரைப்படம் 2021-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பன்மொழி திரைப்படமான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்க, யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வம்சி மற்றும் ப்ரமோத் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

Related posts

பாபா பிளாக் ஷீப் (பட விமர்சனம்)

Jai Chandran

Vijay – Lokeshkanagaraj Join Handstogeather again for Vijay67

Jai Chandran

சோனிலிவுடன் உங்களின் ‘சூட்ஸ்பா’ தருணத்தை மீண்டும் உணருங்கள

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend