Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜப்பானில் தடபுடலாக நடந்த நெப்போலியன் மகன் திருமணம்

இயக்குனர் பாரதிராஜா இயக்கிய புது நெல்ல புது நாத்து படத்தில் அறிமுகமானவர் நெப்போலியன். தொடர்ந்து எம்ஜிஆர் நகரில், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நெப்போலியன் நடித்திருக்கிறார். இது தவிர டெவில் நைட் டான் ஆப் தி நைன் ரோக், கிறிஸ்மஸ் கூப்பன், ஒன் மோர் ட்ரீம் என மூன்று ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார்.

நெப்போலியன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலும்  தீவிரமாக ஈடுபட்டார். திமுகவில் இணைந்து பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த கால கட்டத்தில் மத்திய அமைச்சராகவும் நெப்போலியன் பதவி வகித்திருக்கிறார்.

ஜெயசுதா என்பவரை 1993 ஆம் ஆண்டு நெப்போலியன் மணந்து கொண்டார். இருவரும் ஆதர்ஷ தம்பதிகளாக இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நெப்போலியன் – ஜெயசுதா தம்பதிக்கு தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் மூத்த மகன் தனுசுக்கு பிறக்கும்போதே உடல்நிலை பாதிப்பு இருந்தது.  தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. மகனுக்கு எப்படியாவது நோயை குணப்படுத்தி அவரை நடக்க வைக்க வேண்டும் என்று நெப்போலியன் பெரும் பொறுப்பு எடுத்துக் கொண்டு அதற்காக பல்வேறு சிகிச்சைகளை அவருக்கு அளித்தார். வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் என அவருக்கு சிகிச்சை அளித்தார். ஆனால் அதில் பெரிய தீர்வு கிடைக்கவில்லை.

மகன் தனுஷ் மீது நெப்போலியன் மிகுந்த பாசம் கொண்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால்  அவர் மீது உயிரையே வைத்திருக்கிறார் என்று கூட சொல்லலாம். தனுஷ் மீது மட்டுமல்ல மகன் குணால் மற்றும் மனைவி ஜெயசுதா என குடும்பத்தினர் அனைவரும் மீதும்  நெப்போலியன் உயிரையே வைத்திருக்கிறார்.

மகன் தனுஷ் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அதனால் அவருக்கு மனதில் எந்த தாழ்வு மனப்பான்மையோ அல்லது வேதனையோ வந்து விடக்கூடாது என்பதற்காக. எவர் ஒருவருக்கும் வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய எல்லா இன்பமும் தனுஷ்கும் கிடைக்க வேண்டும் என்று நெப்போலியன் நினைத்தார் அதை செய்தும் காட்டினார்.

மகன் தனுஷ் அமெரிக்கா சென்று வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார் அவரது ஆசையை நிறைவேற்ற சென்னையில் உள்ள தனது வீட்டை எல்லாம் கூட விற்றுவிட்டு குடும்பத்துடன் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன். அவர் சென்ற நேரம் நல்ல நேரமாக அவருக்கு அமைந்ததால். பெரிய பங்களா , வசதி வாய்ப்பு என ஆடம்பர வாழ்க்கை அவருக்கு தேடி வந்தது.

மகன் தனுசுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நெப்போலியன்   ஆசைப்பட்டார்.. திருநெல்வேலி மூலக்கரையை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை தனுசுக்கு பிடித்திருந்தது. அவரது குடும்பத்தினருடன் பேசி திருமணத்துக்கான ஏற்பாடுகளை நெப்போலியன் செய்தார். ஜப்பானை பார்க்க வேண்டும் என்று தனுஷ் தனது ஆசையை தந்தை நெப்போலியனிடம் கூறி இருந்தார். மகன் ஆசைப்பட்டபடி ஜப்பானிலேயே அவரது திருமணத்தை நடத்த முடிவு செய்தார் அதற்கான ஏற்பாடுகளை செய்து முடித்தார்.

நெப்போலியன் மகன் தனுஷ் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதற்கு இன்னொரு உதாரணம் கூற வேண்டும்மனறால். தனுஷ் விமானத்தில் அமர்ந்து ஜப்பான் செல்ல முடியாது என்ற காரணத்தால் அவரை கப்பலில் அழைத்துச் செல்ல முடிவு செய்த நெப்போலியன் ஒரு மாதம் கப்பலிலேயே மகனுடன் பயணித்து ஜப்பான் சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ வில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. மணமகள் அக்ஷயா கழுத்தில் தனுஷ் தாலி கட்டி  திருமணம் செய்து கொண்டார். அப்போது உறவினர்கள் நண்பர்கள் உடனிருந்து புதுமண மக்களை வாழ்த்தினார்கள்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துவதற்காக நடிகர்கள் சரத்குமார்,  கார்த்தி பாண்டியராஜன் , நடிகைகள் ராதிகா, குஷ்பூ, மீனா, டான்ஸ் மாஸ்டர் கலா உள்ளிட்ட ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் ஜப்பான் சென்று தனுஷ்- அக்ஷயா திருமண விழாவில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் திருமண விழாவில் பங்கேற்காமல் போனதற்கு மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ பகிர்ந்து இருக்கிறார் அதில் நெப்போலியன் சார் மகன் திருமண விழாவில் கலந்து கொள்ளாமல் போனது வருத்தமாக இருக்கிறது. இங்குள்ள பணி காரணமாக என்னால் அங்கு வர முடியாமல் போனது. நான் திரையுலகுக்கு வருவதற்கு முன்பு எனக்காக நிறைய செய்திருக்கிறார் நெப்போலியன். அதை நான் மறக்க முடியாது. திருமண விழாவில் நான் உடனிருந்து எல்லா வேலைகளையும் செய்திருக்க வேண்டும். அது நடக்காமல் போய்விட்டது ஆனாலும் கூடிய விரைவில் நேரில் வந்து புதுமண தம்பதிகளை வாழ்த்துவேன் என்று கூறியிருக்கிறார்.

நெப்போலியன் மகன் தனுஷை பொருத்தவரை அவருக்கு உடலில் பாதிப்பு இருந்தாலும் உள்ளத்தில் திடமான உறுதி கொண்டவர். எல்லோரையும்போல் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து சாதிக்க வேண்டும் என்ற நெஞ்சுரம் கொண்டவர் என்பதற்காகவே அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் சமூக வலைத்தளத்தில் இந்தியாவில்  டிரெண்டிங் ஆனது. மணமக்களுக்கு பல்லாயிரக்கணக்கானோர் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்

 

Related posts

Hollywood movie ‘The Marksman’ in English, Tamil, Hindi and Telugu .. Tel Ganesan’s Kyba Films to release

Jai Chandran

நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ – கவிதைத் தொகுதி

CCCinema

மரியா (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend