தமிழக முதல்வராகும் திமுக தலைவர் மு.க்.ஸ்டாலினை சந்தித்து நடிகர் நாசர் வாழ்த்து தெரிவித்ததுடன் கோரிக்கை வைத்தார். இதுபற்றி நாசர் கூறியதாவது:
தமிழ் நாட்டின் அடுத்த முதல்வராக பதவி ஏற்க இருக்கும் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நானும் எனது மனைவி, தயாரிப்பாளர் கமீலா நாசரும் சந்தித்து வாழ்த்துக் கூறினோம். அப்போது, தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தற்போது உள்ள சூழலையும்.. அதனால் பென்ஷன் பெறமுடியாமல் இந்த கொரோனா காலத்தில் மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் கலைஞர்களின் நிலைமையெயும் எடுத்துக் கூறினேன். கண்டிப்பாக ஆவண செய்கிறேன் என்று கூறினார். அதற்கு அவருக்கு முதலில் நன்றியெய் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், முதல்வராக பதவியேற்க இருக்கும் அவருக்கு, அனைத்து நடிகர்,நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துக்களையும்.. பாராடுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நடிகர் நாசர் கூறி உள்ளார்.