சமூக பிரச்னைகளுக்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வாதாடி நல்ல பல தீர்ப்புகளை பெற்றுத் தந்தவர் டிராபிக் ராமசாமி. இவர் உடல் நலமில்லாமல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்,. சிகிச்சை பலனில்லாமல் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும் மற்றும் .தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க. கவுரவ ஆலோசகருமான டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:
சமூக ஆர்வலரும், பொது நல சேவகரும் எனது நீண்ட கால நண்பருமான டிராபிக் ராமசாமி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். நமது சமூகத்திற்கு அவரது மறைவு ஒரு பெரிய இழப்பு.
அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.