Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஆரகன் (பட விமர்சனம்)

படம்: ஆரகன்

நடிப்பு: மைக்கேல் தங்கதுரை,  கவிப்பிரியா,  ஸ்ரீரஞ்சனி,  கலைராணி

தயாரிப்பு: ஹரிஹரன் பஞ்சலிங்கம்

இசை: ; விவேக் – ஜெஸ்வந்த்

ஒளிப்பதிவு: சூர்யா

இயக்கம்: அருண்குமார்

பிஆர்ஓ: A. ஜான்

 

போரில் தப்பி வரும் இளவரசன் காட்டிலுள்ள முனிவரிடம் தஞ்சம் புகுந்து அவரிடம் ஒரு முக்கிய வரம் கேட்கிறான். ஆதிகாலம் முடிந்து நவீன காலம் தொடங்கிய நிலையில் கதை பயணிக்கிறது. ஹீரோ  மைக்கேல் தங்கதுரை மகளிர் விடுதியில் தங்கியிருக்கும் கவிப்பிரியாவை காதலிக்கிறார். தொழில் தொடங்க 10 லட்சம் தேவை என்று மைக்கேல் தங்கதுரை கூற கவிப்பிரியா வேலைக்கு சென்று  தன்னால் முடிந்த பணத்தை தர முடிவு செய்கிறார். காட்டுப்பகுதியில் உள்ள வீட்டில் இருக்கும் ஒரு அம்மாவை கவனித்துக் கொள்ள செல்கிறார். அங்கு பல அமானுஷ்யங்கள் நடக்கின்றன.   இளமையான கவிப்பிரியா திடீரென்று  வயதான தோற்றத்திற்கு மாறிவிடுகிறார். இதெல்லாம் ஏன் நடக்கிறது என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

மைக்கேல் தங்கதுரை தன் காதலி கவிப்பிரியா மீது கொண்டிருக்கும் காதல் போலியாக இருக்கும்  என்று முதலில் தோன்றுகிறது ஆனால் அவரது காதல் ஈடுபாடு உண்மையிலேயே அவரை காதலிக்கிறார் என்று நம்ப வைக்கிறது.

மைக்கேல் தங்கதுரை யார் என்ற சஸ்பென்ஸ் படத்தின் கிளைமாக்ஸ்  நெருக்கத்தில் தெரிய வரும்போது அதிர்ச்சி அரங்கை ஆக்கிரமிக்கிறது.

படத்தில் உள்ள சில சஸ்பென்ஸ்களை உடைத்தால் சுவாரஸ்யம்  குறைந்துவிடும்  அந்த வரிசையில் இன்னொரு சஸ்பென்ஸ் பாத்திரமாக நடித்திருக்கிறார் கலைராணி.  இந்த கதாபாத்திரம் சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஸ்ரீ ரஞ்சனியை  பாசக்கார அம்மாவாக பல படங்களில் பார்த்திருக்கிறோம் இந்த படத்தில் அவருக்கு சற்று மாறுபட்ட வேடம். அதுவும் ஒரு சஸ்பென்ஸ் பாத்திரம்தான்.

குறைந்த அளவே கதாபாத்திரங் களை வைத்துக்கொண்டு  சஸ்பென்ஸ் திரில்லர் அமானுஷ்ய கதையை  இயக்கி அளித்திருக்கிறார் அருண்குமார்.

சூர்யா ஒளிப்பதிவு நேர்ததி, அடந்த காட்டுப்பகுதியில் கேமரா செல்லும்போது கொஞ்சம் கிலி ஏற்படுகிறது.

விவேக் ஜெஸ்வந்த் இசை தேவையான இடத்தில் தேவையை பூர்த்தி செய்திருக்கிறது.

ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்திருக்கிறார் பட்ஜெட் படம் என்பதால் பிரமாண்ட காட்சிகளைக் கூட எளிமையாக செய்து முடித்திருக்கிறார்கள்.

ஆரகன் – மந்திரவாதி.

 

 

 

 

 

Related posts

Yogi Babu returns as a Cop Role

Jai Chandran

Title look of IDUMBANKAARI..

Jai Chandran

Actor Aarav Opened Film Production Company

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend