Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நீல நிற சூரியன் (பட விமர்சனம்)

படம்: நீல நிற சூரியன்

நடிப்பு: சம்யுக்தா விஜயன்,  கிட்டி, கஜராஜ்,  கீதா கைலாசம், பிரசன்னா பாலச்சந்திரன், கே வி என் மணிமேகலை, மசந்த் நடராஜன், ஹரிதா மற்றும் பலர்

தயாரிப்பு:: மாலா மணியன்

இசை:: ஸ்டீவ் பெஞ்சமின்

ஒளிப்பதிவு: ஸ்டீவ் பெஞ்சமின்

இயக்கம்: சம்யுக்தா விஜயன்

பி ஆர் ஓ: கே எஸ் கே செல்வா

 

பள்ளியில் டீச்சராக பணி புரியும் அரவிந்த் (சம்யுக்தா விஜயன்); தான் ஒரு பெண் போல உணர்கிறார்.  சிறுவயதிலிருந்தே இந்த உணர்வு அவருக்கு இருக்கிறது. இந்த நிலையில் தான் ஒரு பெண்ணாக மாற முடிவு செய்கிறார்.அதற்கான மருத்துவ சிகிச்சையும் எடுத்துக் கொள்கிறார். ஆணாக இருந்து பெண்ணாக அரவிந்த் மாறிய நிலையில்  அவரது குடும்பம், பணி செய்யும் இடம் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல் என்ன? அதை அரவிந்தால் சமாளிக்க முடிகிறதா  என்பது கிளைமாக்ஸ்.

சம்யுக்தா விஜயன் தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை எழுதி இயக்கி நடித்திருக்கிறார்.  சட்டை பேண்ட் அணிந்திருந்தாலும் தன்னிடமுள்ள பெண்மை தன்மையை அழகாக வெளிப்படுத்துகிறார்.

ஆணாக இருக்கும் சம்யுக்தா பெண்ணாக மாறி சேலை ரவிக்கை அணிந்து கொண்டு பள்ளிக்குச் செல்வது, அங்கே மற்றவர்கள் கேலி செய்யும் போது அதை கண்டு வேதனையில் துடிப்பது எல்லாமே காட்சிகளை உருக்கமாகவும் மனதுக்கு நெருக்கமாகவும் நகர்த்தி செல்கிறது.

பெண்ணாக மாறுவது என்று முடிவெடுத்து பெண்ணாக மாறிய பின் தனக்கு பெண் என்பதற்கான சான்றிதழை அரசு அதிகாரிகளில் தர மறுப்பதை கண்டு வேதனை அடையும்போது அவரைப்போல் இருக்கும் நபர்கள் என்னவெல்லாம் பாடுபடுவார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.

வீட்டில் தனக்கு பெண் பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும் வேண்டாம் என்று மறுக்கும் அரவிந்த் (சம்யுகதா ) குடும்பத்தினர் திருமணத்திற்கு கட்டாயம் செய்யும் நிலையில் வேறு வழியில்லாமல் அவர் பெண்ணாக மாறி நிற்பது திருப்பம்.

துணிச்சலாக பெண்ணாக மாறுவது என்று முடிவெடுத்த பின் மற்றவர்கள் கேலிசெய்கிறார்கள்,  கிண்டல் செய்கிறார்கள் என்பதற்காக தான் எடுத்த முடிவு தவறோ என்று எண்ணும் அளவுக்கு கிளைமாக்சில் அவரது உணர்வுகள் வெளிப்படுகிறது. இந்த கிளைமாக்ஸ் எதார்த்தமாக இருந்தாலும் இது போன்ற சிக்கலில் இருக்கும் நபர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.

மாலா மணியன் படத்தை தயாரித்திருக்கிறார். பத்துக்கு மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும்  தட்டி வந்திருக்கிறது நீல நிற சூரியன்.

ஒளிப்பதிவு இசை எடிட்டிங் எல்லாமே ஸ்டீவ் பெஞ்சமின்  செய்து கொடுத்திருக்கிறார்.

நீல நிற சூரியன் – ஒரு மாற்று அனுபவம்.

 

 

Related posts

“Ramarajan 46” deals with a serious social issue

Jai Chandran

Friendship Movie 3rd single from tomorrow : Harbhajan Singh Bdy special !

Jai Chandran

அருண் வைத்தியநாதன் தயாரித்து இயக்கும் குழந்தைகள் படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend