Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா..

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா.

‘பட்டாம்பூச்சி’, ‘தி வெட்டிங் சாங்’ என இரண்டு தொடர்ச்சியான வெற்றி பாடல்களை கொடுத்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழுவினர் – தற்போது மற்றொரு புதிய பிளாக் பஸ்டர் ஹிட் பாடலுடன் மீண்டும் வருகை தந்துள்ளனர். இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘தி ஒன் ரூல்’ வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாடல் பிளே லிஸ்ட்களை ஆக்கிரமிக்கும் சமீபத்திய பாடலாகவும் மாறி உள்ளது.

கவர்ச்சியான இசை-  கிளர்ச்சியூட்டும் அதிர்வுகளால் நிரம்பிய.. துடிப்பான- அதிக ஆற்றலுடைய பாடலாக ‘தி ஒன் ரூல்’ உருவாகியுள்ளது. இந்தப் பாடல் உற்சாகத்தையும்… கம்பீரத்தையும்… கச்சிதமாக படம் பிடித்துள்ளது. இந்தப் பாடல் – சூர்யாவை ஒரு புத்தம் புதிய சக்தி மிக்க அவதாரத்தில் காட்சிப்படுத்துகிறது. அத்துடன் உடனடியாக கூட்டத்தின் ஒட்டுமொத்த கவனத்தை காந்தம் போல் ஈர்க்கும் ஒரு பாடலாகவும்.. தீப்பற்ற வைக்கும்… பொறி பறக்கும் …பாடலாகவும் அமைந்திருக்கிறது.

இந்தப் பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அவரது தாளம் போட வைக்கும் இசையில் உருவான மற்றொரு வெற்றி பாடலாக இருக்கிறது.  இந்தப் பாடலுக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் பாடலாசிரியர் & பாடகர் கானா காதர் இப்பாடலை எழுதி, பாடியிருக்கிறார். இவரது குரலும் இந்தப் பாடலுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை அளித்து, உடனடியாக வசீகரிக்கும் தன்மையையும் கொடுத்திருக்கிறது.

‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்திலிருந்து தொடர்ச்சியாக மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் பாடல்கள் அனைத்தும்… இந்தத் திரைப்படத்திற்கு.. திரையரங்க வெளியீட்டிற்கு முன்னதாக பெரும் எதிர்பார்ப்பை தொடர்ந்து உண்டாக்கி வருகிறது. மேலும் இப்படத்தைப் பற்றிய ஒவ்வொரு புதிய தகவலும் எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிறது.‌

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments)   – ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas) ஆகிய நிறுவனங்களின் சார்பில்  சூர்யதேவர நாக வம்ஷீ- சாயி சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்து, ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம்-  சுதந்திர தின வார இறுதியில்… ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

Related posts

லவ் ஓ லவ் (பட விமர்சனம்)

Jai Chandran

“நண்பன் ஒருவன் வந்த பிறகு”‘ 2ம் தேதி ரிலீஸ்

Jai Chandran

டங்கி பார்க்க தாயகம் திரும்பும் ஷாருக் ரசிகர்கள்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend