Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சிக்னல் அட் 11:30 (பட விமர்சனம் )

படம்: சிக்னல் அட் 11:30

நடிப்பு: சந்தோஷ் பிரதாப், பவ்யா ட்ரிகா, புஜிதா பொன்னாட, ஜெயபிரகாஷ், முனீஸ்காந்த்

தயாரிப்பு: மலர்விழி நடேசன், ஷிவானி சுப்பிரமணியன்

இசை: டி இமான்

ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்ஜி

இயக்கம்: மலர்விழி நடேசன்

பி ஆர் ஓ : சுரேஷ் சந்திரா ( D’ One), அப்துல் ஏ நாசர்

கதை: குழப்பமான மனநிலையில் தனது ஐடி நிறுவனத்திலிருந்து காரில் புறப்படுகிறார் சித்தார்த் ( சந்தோஷ் பிரதாப் ). இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் ஒரு பெண் தனியாக நின்று யாருக்காகவோ காத்திருக்கிறார். அவரை பார்க்கும் சித்தார்த், ” இந்த நேரத்தில் இங்கு நிற்காதீர்கள். இது பாதுகாப்பான இடமில்லை பாதுகாப்பான இடத்தில் இறக்கி விடுகிறேன்” என்று கூறி அழைக்கிறார். அந்தப் பெண் வர மறுக்கவே அவரை தூக்கிச் செல்கிறார். அதன்பிறகு நடப்பது எல்லாமே பெரும் மர்மமாக அமைகிறது. இதன் முடிவு எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் தருகிறது.

பெரும்பாலான படங்களில் டிப் டாப்பாக வரும் சந்தோஷ் பிரதாப் இந்த படத்திலும் ஐடி கம்பெனி ஓனராக டிப் டாப்பாக வந்தாலும் நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்த இந்த கதாபாத்திரம் பெரிதாக கை கொடுத்திருக்கிறது. அதை அவரும் நழுவிடாமல் பயன்படுத்தியிருப்பதுதான் இன்ப அதிர்ச்சி.

யாரோ நான்கு பேர் துரத்துவதாக கூறி நள்ளிரவில் நெடுஞ்சாலை யில் தனியாக நிற்கும் பெண்ணை சந்தோஷ் வற்புறுத்தி தோளில் தூக்கி வரும்போது இவர் ஹீரோவா? வில்லனா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறார். ஏன் அவர் அப்படி செய்கிறார் என்ற மர்ம முடிச்சி படத்தை சுவாரசியமாக கடைசி வரை ரசிக்க வைக்கிறது.

பவ்யா ட்ரிக்கா சந்தோஷ் பிரதாப்பிடம் தனி பங்களாவில் சிக்கிக் கொண்டு பதறும் பதற்றம் படபடப்பு. அடுத்த சில மணித்துளிகளில் அவர் டாக்டர் கோலத்தில் வந்து நிற்கும் போது, ” என்னடா நடக்குது இங்கே” என்று கேட்கத் தோன்றுகிறது.

ஜெயபிரகாஷ் தன் மகள் மீது பாசம் காட்டும் அன்பு தந்தையாக நடிக்க, மீடியா நிறுவன டீம் லீடராக முனிஸ் காந்த் நகைச்சுவைக்கு பயன்பட்டிருக்கிறார்.

சுஜிதா பொன்னாடா சந்தோஷ் பிரதாபின் காதலியாக அழகு தேவதையாக வருகிறார். அவருக்குள்ளும் ஒரு சஸ்பென்சை இயக்குனர் பொத்தி வைத்திருப்பது முக்கிய முடிச்சு.

மலர்விழி நடேசன், ஷிவானி சுப்பிரமணியன் தயாரித்திருக்கின்றனர்.

படத்தை இயக்கிய மலர்விழி நடேசன் மொத்த க்ரிடிட்டுக்கும் சொந்தக்காரர். ஒரே திசையில் இல்லாமல் காதல், கடத்தல், சைக்கோ, போலீஸ் விசாரணை என்று பல திசைகளில் திரைக்கதையை அமைத்து பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

டி இமான் இசையில் பாடல்கள் ஒரு பக்கம் விருந்தாகவும் மறுபக்கம் ஆக்சன் காட்சிகளுக்கு விறுவிறுப்பாகவும் அமைந்திருக்கிறது

ராஜா பட்டாச்சார்ஜி கேமரா இரவு நேரத்தையும், நெரிசல் இல்லாத நீண்ட தூர நெடுஞ்சாலையை திரில்லிங் காட்சிகளுக்கும் செமயாக பயன்படுத்தியிருக்கிறார்.

சிக்னல் அட் 11:30 – திருப்தி.

Review by K Jayachandhiran www.trendingcinemasnow.com

Related posts

சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ பட இசை- முன்னோட்ட வெளியீடு..

Jai Chandran

இந்திரா பட இசை – டிரெய்லர் வெளியீடு

Jai Chandran

Allu Arjun emotional at Pushpa 2: The Rule Pre-Release Event

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend