Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ராக்கெட் டிரைவர் ( பட விமர்சனம்)

படம்: ராக்கெட் டிரைவர்

நடிப்பு: விஷ்வத், சுனைனா, நாகா விஷால், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன், ராமச்சந்திரன் துரைராஜ்

தயாரிப்பு: அனிருத் வல்லப்

இசை: கௌஷிக் க்ரிஷ்

ஒளிப்பதிவு: ரெஜிமெல் சூர்யா தாமஸ்

இயக்கம்:  ஸ்ரீராம் ஆனந்தசங்கர்

பிஆர்ஓ: ஸ்ரீ  வெங்கடேஷ்

 

ஆட்டோ டிரைவர் பிரபா (விஸ்வத்) தனியாக சாலையில் ஆட்டோ ஓட்டி செல்லும்போது ரோட்டோரத்தில் அப்பாவி சிறுவன் ஒருவன் நிற்கிறான். அவன் மீது பரிதாபப்பட்டு ஓசியில் அவன் செல்லும் இடமான பல்கலைக் கழகத்திற்கு அழைத்து செல்கிறான். அங்கு சென்ற பிறகு பல்கலைக்கழகத்தில் இல்லாத ஒரு அதிகாரி பெயரைச் சொல்லி அவரைப் பார்க்க வேண்டுமென கேட்கிறான். “உன் பெயர் என்ன!” என்று அங்கிருக்கும் நபர் கேட்க அப்துல் கலாம் என்கிறான். அதைக் கேட்டவுடன்  பிரபா அதிர்ச்சி அடைகிறான். டைம் லைன் மிஷின் மூலம் மறைந்த அப்துல் கலாமே இளம் வயதில் வந்ததாக காட்சிகள் நகர்கிறது அதன் பிறகு நடக்கும் சுவாரஸ்யங்கள் தான் கதை.

1948 காலகட்டத்திலிருந்து அப்துல் கலாம் 2023 காலகட்டத்திற்கு பயணித்து வரும் கதை என்பது கற்பனைக்கு எட்டாதது. அதை  சுவாரசியமாக படம் பார்க்க முயற்சித்திருக்கிறார்கள்.

ஆட்டோ டிரைவர் பிரபாவாக வரும் விஷ்வத் ஒரு விஞ்ஞான பைத்தியம். அவரிடம் சிறுவயது அப்துல் கலாம் கிடைத்தால் என்னவெல்லாம் கூத்து நடக்கும் என்பதை கண்முன் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்

சிறு வயது அப்துல் கலாமாக வரும் நாகாவிஷால் அப்பாவித்தனமாக பேசி அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதியவர் காத்தாடி ராமமூர்த்தியை சிறுவன் நாகா விஷால் வாடா போடா என்று அழைப்பதெல்லாம் கொஞ்சம்.ஓவர்.

1948 காலகட்ட காட்சிகள் குறைவாக படமாக்கப்பட்டிருந் தாலும் நினைவில் நிற்கிறது.

அப்துல் கலாமை சிறுவயது இளைஞராக காட்டுவதாக கதை அமைத்துவிட்டு அவரை ஹீரோ விஷ்வத் பல இடங்களில் திட்டித் தீர்ப்பதை ஏற்க முடியவில்லை.  என்னதான் சிறுவயது இளைஞனாக இருந்தாலும் அவர் அப்துல் கலாம் என்பது தெரிந்தும் அவரை ஹீரோ திட்டுவதை எல்லாம் தணிக்கை அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள் என்பது கேள்வி குறி.

சுனைனா டிராபிக் போலீசாக வந்தாலும் ஒரு இடத்தில் கூட டிராபிக்கை அவர் சரி செய்ததுபோல் தெரியவில்லை. இரண்டு முறை டிபன் சாப்பிடுகிறார், ஒருமுறை டீ குடிக்கிறார்.

படத்தில் வேறு முக்கிய கதாபாத்திரம் எதுவும் இல்லை. குறைந்த பட்ஜெட் என்று சொல்லி காட்சிகளை ரொம்பவே  நாடகத்தனமாக  அமைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீராம் ஆனந்த சங்கர் படத்தை இயக்கியுள்ளார். இன்னும் கூட காட்சிகளை இன்ட்ரஸ்டிங்காக  அமைத்திருக்கலாம்.

இசை அமைப்பாளர் கௌஷிக் கிரிஷ் . கலாமுக்கு மிகவும் பிடித்த எம் எஸ் சுப்புலட்சுமி பாடல் ஒன்றையாவது பின்னணியில் சுழல விட்டிருக்கலாம்.

ராக்கெட் டிரைவர் – ஆட்டோ டிரைவர்.

 

 

 

Related posts

போட்டோ ஷூட் :அமீரின் புதிய படம்

Jai Chandran

“டேக் டைவர்ஷன்” நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்: இயக்குனர் பேரரசு பேச்சு

Jai Chandran

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடும் சவாலை தருவாரா சனம் ஷெட்டி ?

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend