Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஜோரா கைய தட்டுங்க (பட விமர்சனம்)

படம்: ஜோரா கைய தட்டுங்க

நடிப்பு: யோகி பாபு, சாந்தி ராவ், ஹரிஷ் பெராடி, கல்கி, வசந்தி, மணிமாறன், ஜாகீர் அலி அருவி பாலா,

தயாரிப்பு: ஜாகிர் அலி

இசை:
எஸ்.என்.அருணகிரி

ஒளிப்பதிவு: மது அம்பட்

இயக்கம்: வினிஷ் மில்லினியம், பிரகாஷ். கே.

பி ஆர் ஓ :; சதீஷ் S2

யோகி பாபு தனது தந்தை வழியில் மாஜிக் தொழில் செய்ய முயல்கிறார். ஆனால் அதில் அவருக்கு தோல்விதான் ஏற்படுகிறது. அவர் தங்கி இருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள சில இளைஞர்கள் அவருக்கு தொல்லை கொடுப்பதை வேலையாக வைத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சில கொலை சம்பவங்கள் நடக்கின்றன. யோகிபாபுவும் காணாமல் போகிறார்.
அந்த கொலைக்கு என்ன காரணம், யோகிபாபு கதி என்னவானது என்பதுதான் படத்தின் முடிச்சு.

யோகி பாபு வந்தாலே கலகலப்பை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். இதில் ரொம்பவே அடக்கி வாசித்திருக் கிறார். போலீஸ் நிலையத்தில் அடி வாங்குகிறார், ரவுடிகளிடம் அடி வாங்குகிறார், மாஜிக் செய்து தோல்வி காண்கிறார்… இப்படியே அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பது பலவீனம்

வழக்கமான அவரது கிண்டல் கேலி பேச்சுக்கள்தான் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். பெயரளவில் சில கமெண்ட்கள் அடித்து சிரிக்க வைக்கிறார்.

யோகி பாபுவுக்கு காதலியாக வருகிறார் சாந்தி ராவ். ஒரு டூயட்டும் அவருடன் பாடுகிறார். மற்றபடி அவருக்கு அதிக வேலை இல்லை.. யோகிபாபு காதல் வயப்பட்டால் எப்படியெல்லாம் வெட்கப்படுவார் என்பதை மது அம்பட் கேமிரா பதிவு செய்துள்ளது புதுசு.

ஹரிஷ் பெராடி போலீஸ் அதிகாரியாக வருகிறார். முகத்தில் காட்டும் கோபத்தை செயலில் காட்டாவில்லை.

ஜாகிர் அலி படத்தை தயாரித்திருப்பதுடன் நடித்தும் இருக்கிறார்.

எஸ்.என்.அருணகிரி இசை அமைத்துள்ளார்.

ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய விருதுகள் வென்ற மது அம்பட் ஒளிப்பதிவு கனகச்சிதம்.

இயக்குனர்கள் வினிஷ் மில்லினியம், பிரகாஷ் கே. இருவரும் யோகி பாபுவுக்கு ஏற்ற கதை எழுதி இருந்தாலும் திரைக்கதை இன்னும் டுவிஸ்ட் அந்த டர்ன்ஸ் கொணடுட்வர தவறியிருக்கிறார்கள். யோகி பாபு இருக்கும் வெயிட்டுக்கு அவர் ரவுடிகளை துவம்சம் கூட செய்திருக்கலாம். அந்த ஸ்டண்ட் காட்சிகளை மிஸ் செய்துள்ளார்கள்.

ஜோரா கைய தட்டுங்க – ஓசை குறைவு.

Two And A Half Star Rating Illustration Vector

Related posts

சமுத்திரக்கனியை நெஞ்சில் அடித்த மூதாட்டி.. வலியால் தவித்த நடிகர்..

Jai Chandran

அருண்ராஜா காமராஜ் மனைவி காலமானார்

Jai Chandran

Lyricist Ku Karthik as turns Music Director

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend