Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஆலன் (பட விமர்சனம்)

படம்: ஆலன்

நடிப்பு:  வெற்றி, மதுரா, அனு சிதாரா, விவேக் பிரசன்னா, , அருவி மதன், டிடோ வில்சன், ஶ்ரீ  தேவா

தயாரிப்பு: சிவா ஆர்

இசை: மனோஜ் கிருஷனா

ஒளிப்பதிவு: விந்தன் ஸ்டாலின்

இயக்கம்:; சிவா ஆர்

பி ஆர் ஓ:; யுவராஜ்

சிறுவயதில் குடும்ப சூழல் காரணமாக பாதிக்கப்பட்டு காசி வரும் வெற்றி சன்னியாசி போல் ஜடாமுடியோடு  அலைகிறார்.  அவரது குரு, “நீ உன் ஊருக்கு செல்” என்று திருப்பி அனுப்புகிறார். ரயிலில் வரும்போது வெளிநாட்டுப் பெண் நட்பு கிடைக்கிறது. நட்பு காதலாக வளர்கிறது. ஒரு கட்டத்தில் அப்பெண் கொல்லப்படுகிறார். மனம் வெறுத்து மீண்டும் சன்னியாசி ஆகும் வெற்றிக்கு இன்னொரு காதல் கிடைக்கிறது. அந்தக் காதல் வெற்றி அடைந்ததா? அதுவும் சோகத்தில் முடிகிறதா?  வெற்றியின் சன்னியாசி வாழ்க்கை என்னவாகிறது?  என்ற கேள்விகளுக்கு ஆலன் பதில் அளிக்கிறது

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார் என்ற ஒரு பெயர் பெற்றிருப்பவர் வெற்றி. இப்படம் அவருக்கு ஒரு வித்தியாசம்தான் ஆனால்  சன்னியாசியாக ஏன் மாறுகிறார் பிறகு ஏன் காதலில் விழுகிறார் என்ற கேள்வியெல்லாம் எழாமல் இல்லை.

வெற்றிக்கும், வெளிநாட்டு பெண்ணாக வரும். மதுராக்கும் இடையே மலரும் காதல் கவித்துமாக  பயணிக்கிறது. திடீரென்று மதுரா கொல்லப்படுவதும், வெற்றி போலீசால் கைது செய்யப்படுவதும் திடீர்  பரபரபபு.

முதல் காதல் தோல்வி அடைந்து இரண்டாவது காதல் அனு சிதாராவுடன் வெற்றி காதல் கொள்வது முரணாக இருக்கிறது. ஆனால் இந்த காதலிலும் ஒரு கவித்துவம் இழையோடுகிறது.

காதலில் தோல்வியடைந்து சன்னியாசி ஆனதைத்தான்  கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் வெற்றி சன்னியாசி ஆன பிறகு இரண்டு காதல்  செய்வது இன்னொரு முரண்.

ஜனனி தாமசாக வரும் மதுரா எந்நேரமும் சிரித்தபடி பேசி அழகோவியமாக மனதில் பதிகிறார், அனு சிதாராவும் என்னதான் கொழுக்மொழுக் என்று இருந்தாலும் மென்மையான நடிப்பில் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார்.

சிவா ஆர் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். கவித்துவமான ஒரு காதலை சொல்ல வேண்டும் என்ற  முயற்சி தெரிகிறது.  சன்னியாசியை சம்சாரியாக்க முயற்சிப்பதுதான் விவகாரமான விஷயம்.

விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு காசி ராமேஸ்வரம், ரிஷிகேஷ் என்று பெரும்பாலான காட்சிகள் சன்னியாசி, விரக்தி  கோலமாகவே இருக்கிறது.

மனோஜ் இசை கர்நாடிக் இசையை நவீன இசையோடு கோர்த்திருக்கிறது.

ஆலன் – சன்னியாசி காதல்.

 

 

Related posts

“பைக்கர் ” மூலம் ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கும் சர்வானந்த்..

Jai Chandran

விஜய்சேதுபதி நடிக்கும் க.பெ ரணசிங்கம் ‘டீஸர் ரிலீஸ்..

Jai Chandran

ஆஹாவில் புதிய வெப் சீரிஸ்  “மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend